animated gif how to

எண்ணெயை ஏற்றுமதி செய்யாமலும் ஈரானால் முன்னேற முடியும் – நஜாத் அதிரடி!

April 11, 2012 |

கச்சா எண்ணெய் ஏற்றுமதி இல்லாவிட்டாலும் ஈரானுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற இயலும் என்று அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனின் தடையை கண்டித்து கிரீஸ் நாட்டிற்கு எண்ணெய் ஏற்றுமதிச்செய்வதை செவ்வாய்க்கிழமை ஈரான் நிறுத்தியது. பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளுக்கு எதிராக எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திவிட்டு தடைக்கு பதில் தடையை விதிப்போம் என்று கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஈரானுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் தடைகளை புறந்தள்ளிய நஜாத் தொலைக்காட்சியில் ஆற்றி உரையில், இத்தகைய நடவடிக்கைகள் எடுபடாது என்று சுட்டிக்காட்டினார். ஒரு பேரல் எண்ணெய் கூட விற்பனைச் செய்யாவிட்டாலும் கூட இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எவ்வித பிரச்சனையுமின்றி முன்னேற ஈரானுக்கு வலு உள்ளது என்று நஜாத் தெரிவித்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!