animated gif how to

ஆப்கானில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு எதிராக பெண்கள் போராட்டம்!

April 18, 2012 |

பத்தாண்டுகளையும் தாண்டி அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவத்தின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ஆப்கானில் நேற்று முன்தினம் பெண்களும், குழந்தைகளும் நீதியை கோரி போராட்டம் நடத்தினர்.


நீதி எங்கே? பெண்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்கும் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்! என்று எழுதப்பட்ட அட்டைகளுடன் பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஆக்கிரமிப்பு ராணுவத்தினராலும், ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல்களாலும் பெண்கள் கொலைச் செய்யப்படுகின்றனர். இம்மாதம் ஆப்கானின் ஹராத்தில் மூன்று பெண்களும், கோஸ்த் மற்றும் பக்த் ஆகிய பகுதிகளில் ஒரு பெண் வீதமும் கொலைச் செய்யப்பட்டனர்.

அச்சப்பட்டு குரல் எழுப்ப இயலாத ஆப்கானின் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று 17 வயதான பாத்திமா ஸெய்தி கூறினார்.பெண்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக ஸதஃப் ஃபித்ரத் என்பவர் கூறினார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!