animated gif how to

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தகத்துறை பணிப்பாளர் நூரானியா ஹசன் வபாத்தானார்!

April 19, 2012 |

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தகத்துறை பணிப்பாளர் நூரானியா ஹசன் இன்று (19) காலை இடம்பெற்ற வாகன விபத் தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னாஇலய்ஹி ராஜிஹூன். யாழ்பானம் நோக்கி பயனித்த போது அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது .
இடம் பெற்ற இவ்விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த வேனும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் வேனில் பயணித்த ஐவரும் லொறியின் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!