animated gif how to

11 ஆண்டுகள் கழிந்து முஹம்மது அல் துர்ராவின் மரணம் குறித்து விசாரணை! (வீடியோ இணைப்பு)

March 02, 2012 |

பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பு காஸ்ஸாவில் சியோனிச பயங்கரவாத இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கி தோட்டாகள் தாக்கி இறுதி மூச்சை விட்ட பலஸ்தீன் பாலகன் முஹம்மது அல் துராவின் மரணத்தை குறித்து விசாரணை நடத்த பிரான்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி காஸ்ஸாவில் நெட்ஸாரிமிற்கு அருகே தனது தந்தையின் மடியில் கிடந்து சியோனிஸ்டுகளின் துப்பாக்கி தோட்டா தாக்கிய 12 வயதான துரா மரணமடைந்தார். இஸ்ரேலின் கொடூரத்தின் அடையாளமாக உலக அதிர்ச்சியுடன் கண்ட முஹம்மது அல் துராவின் மரணக்காட்சிகளை முதன் முதலாக ஃபிரான்சு நாட்டு தொலைக்காட்சி சேனலான பிரான்ஸ்-2 ஒளிபரப்பியது.

சார்ல்ஸ் எண்டர்லி என்ற ரிப்போர்டர் இந்த காட்சிகளை வெளியிட்டார். கான்கீரீட் சுவற்றின் பின்னால் ஒளிந்துகொண்டு சொந்த மகனை துப்பாக்கி தோட்டாக்களிலிருந்து பாதுகாக்க 45 நிமிடங்களாக முயற்சித்த தந்தை ஜமால் அல்துரா ராணுவத்தினரிடம் சுடாதீர்கள் என கெஞ்சினார்.

ஆனால், மனித நேயம் சிறிதும் இல்லாத சியோனிஸ்டுகளுக்கு இந்த கோரிக்கை எல்லாம் காதில் கேட்கவா செய்யும். அவர்களது கொடூரத்தை அரங்கேற்றினார்கள். இறுதியில் முஹம்மது அல் துரா தோட்டா தாக்கி தனது தந்தையின் மடியில் கிடந்து மரணித்தார். தந்தையின் மடியில் துடிதுடித்து மரணிக்கும் காட்சியை பிரான்சு சேனல் ஒளிபரப்பியது. இக்காட்சிகள் போலியானது என கூறி ஊடக விமர்சகரான ஃபிலிப் கார்ல்ஸெண்ட்ரி என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவர் மீது அவதூறு குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 2008-ஆம் ஆண்டு ஃபிலிஃப் செண்ட்ரி மேல் முறையீடு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிப்போர்டர் எண்டரிலினும் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பிரான்சு நீதிமன்றம் முஹம்மது அல் துராவின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

ஃபலஸ்தீன் போராட்டத்தின் சின்னமாக கருதப்படும் முஹம்மது அல் துராவின் பெயரை ஃபலஸ்தீன் தெருக்களுக்கும், டீ ஷர்டுகளுக்கும் அளித்து அவரது உயிர் தியாகத்தை அணையாமல் ஃபலஸ்தீன் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முஹம்மது அல் துரா செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!