animated gif how to

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!

February 28, 2012 |

துருக்கியில் உலகின் மிகவும் பழமையான பைபிள் கண்டுபிடிப்பு. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோஸ்பெல் பர்னபாஸ் என்பவரால் தொகுக்கப்பட்ட பைபிள் அதாவது இன்ஜீல் வேத நூல் துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது. அதை தான் பார்க்கவேண்டும் என்று 16-வது போப் பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை வத்திகான் உத்யோகபூர்மமாக அறிவித்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
அதை என்ன விலைகொடுத்தும் வாங்கும் முயற்சியில் வத்திகான் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மிகவும் பழமையான பைபிள் கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி பொலிசாரினால் கடத்தல் குழுவிடமிருந்து கைப்பற்றபட்டுள்ளது.Video
துருக்கி இதை கடந்த 12 ஆண்டுகளாக இரகசியமாக வைத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது அதனை முறையாக ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஒரு குறிப்பு தெரிவிக்கிறது, தற்போது வத்திக்கானில் இருக்கின்ற பைபிளை விடவும் 200 ஆண்டுகள் இது பழமை வாய்ந்ததென்றும், இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) வருகை குறித்து இதில் பல இடங்களில் முன்னறிவிப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளது .
இஸ்லாமி கோட்பாடுகளுக்கு மிகவும் நெருக்கமான தகவல்களை இது கொண்டுள்ளதாகவும் , Jesus கடவுள் அல்ல அவர் ஒரு மனிதர்தான் என்ற பல இஸ்லாமிய கோட்பாடுகளையும் அது கொண்டுள்ளதாகவும்செய்திகள் தெரிவிக்கின்றன .

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!