animated gif how to

நரேந்திரமோடி ஒரு நாசி பயங்கரவாதி - நடிகை நந்திதா தாஸ்

February 07, 2012 |


குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி நாசி பயங்கரவாதி அடோல்ஃப் ஹிட்லரைப் போன்றவர் என திரைப்பட நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார். எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் விமன்ஸ் ஸ்டடீஸ் ரிசர்ச் சென்டர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.அப்பொழுது அவர் கூறியது,

ஹிட்லரின் காலத்தில் தான் ஜெர்மனியில் மிகச்சிறந்த சாலைகள் போடப்பட்டன. ஐரோப்பிய நகரங்களை இணைக்கும் சிறந்த சாலைகளாக அவை இப்பொழுதும் கருதப்படுகின்றன.
ஜெர்மனிக்கு சிறந்த மருத்துவமனைகள் ஹிட்லர் காலத்தில்தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப்பிரியராகவும், சைவ உணவை சாப்பிடுபவராகவும், மதுபானம் அருந்தாதவராகவும் இருந்தார். ஆனால், இன்று இவற்றின் பெயரால் ஜெர்மனி நாட்டவர் கூட ஹிட்லரை நினைவு கூறுவதில்லை.

குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் கோர நினைவுகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை பணத்தால் மாற்றிவிட முடியாது. இனப் படுகொலையை மறக்கவேண்டும் என சிலர் உபதேசிக்கிறார்கள். ஆனால், அது என்னால் இயலாது’ என நந்திதா தாஸ் கூறினார்.

இனப் படுகொலையை தவிர்த்தால் குஜராத்தின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் மோடி என்ற வாதத்திற்கு பதில் தரும் வகையில் தனது உரையை அவர் ஆற்றினார். மனித உரிமை ஆர்வலரான நந்திதா, ‘ஃபிராக்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். இத்திரைப்படம் குஜராத் இனப் படுகொலையின் பிந்தைய சூழல்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!