தென் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளரும், கவுன்ஸில் செயலாளருமான எச்.அப்துல்சத்தார் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பிரதான நிறைவேற்று உத்தியோகத்தரான உபவேந்தர் கல்வி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தராகவும், பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தராகவும் விளங்குவதுடன் செனற் கவுன்சில் சபைகளின் தலைவராகவும் பதவி வகிப்பார்.
விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பங்களை எச்.அப்துல் சத்தார், பதிவாளர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகம், ஒலுவில் எனும் முகவரிக்கு பெப்ரவரி 29ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் விண்ணப்பங்களை நேரடியாகக் கையளிப்பவர்கள் 29ஆம் திகதி பி.ப. 3.00 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை தாங்கி வரும் கடித உறை-யின் இடது பக்க மேல் மூலையில் “உபவேந்தர் பதவி’ எனக் குறிப்பிட வேண்டும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
RSS Feed
February 07, 2012
|




0 கருத்துரைகள் :
Post a Comment