திரைப்படத் துறையின் உயரிய விருதான ஒஸ்கார் விருதை வென்றதன் மூலம் இஸ்ரேலை வென்றிருக்கிறது ஈரான்.
சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஒஸ்கார் விருதை வென்றிருக்கிறது ஈரான் திரைப்படமான "தி செபரேஷன்". இஸ்ரேலியப் படமான "புட்நோட்"டும்" தி செபரேஷனும்" போட்டியிட்டதில் வெளிநாட்டுப் படங்களுக்கான ஆஸ்கர் விருதை, இஸ்ரேலைப் பின்னுக்குத் தள்ளி ஈரான் வென்றுள்ளது.
அரசியல் அரங்கத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலையில் ஈரான் ஒஸ்கார் விருதை வென்றுள்ளதைக் குறிப்பிடும் அந்நாட்டு ஊடகங்கள் அனைத்துமே "இஸ்ரேலை வென்றது ஈரான்" என்கின்றன. ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சியும் இப்படித்தான் சொல்லி வருகிறது.
அரசியல் அரங்கில் ஈரானைத் தனிமைப்படுத்த அமெரிக்கா, இஸ்ரேல், அவற்றின் கூட்டு நாடுகள் ஆகியன முயன்று வரும் நிலையில், ஈரான் படத்தின் பெயரும் "தி செபரேஷன்" என்று அமைந்துள்ளதும், அமெரிக்காவுக்கு ஈரான் விவகாரத்தில் "அடிக்குறிப்புகளை" அளித்துவரும் இஸ்ரேல் தனது படத்தின் பெயரை "புட் நோட்" என்று வைத்துள்ளதும் வியக்கத் தக்கதாக உள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment