animated gif how to

நாடு பூராவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

February 27, 2012 |


ஜெனீவா நகரில் இன்று தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதைக் கண்டித்து தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்தி என அனைத்துப் பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் பெற்றுள்ளது. 
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களிலும் , கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி, ஓட்டமாவடி,ஏறாவூர் அம்பாறை, திருகோணமலை ஆகிய இடங்களிலும் மன்னார், புத்தளம் ஆகிய பிரதேசங்களிலும் மத்திய மாகாணத்தில் கண்டி , கம்பளை, மாத்தளை ,மாவனல்லை ஆகிய பிரதேசங்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன .இதேவேளை, கொழும்பிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவரும் முயற்சிக்கு புறக்கோட்டை முன்பாக ஒன்று திரண்ட மக்கள் தமது எதிர்பை தெரிவித்துள்ளனர் . யாழ்பாணத்தில் எதிர்பார்த்ததை விடவும் பெரிய அளவிலான பேரணி இடம்பெற்றுள்ளது .
இந்த ஊர்வலத்தில் யாருடைய நலன்களுக்காக இந்த அழுத்தங்கள்? மீண்டும் இனமோதல்களை உருவாக்கவா மேற்குலகின் தந்திரங்கள்? மேற்குலகின் நலன்களுக்கான கருவிகளல்ல நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும். கிடைத்த சமாதானத்தைப் பாதுகாப்போம்! சமாதானத்தைக் குழப்புவதை அனுமதியோம் வெளிச்சக்திகள் எங்களைக் குழப்புவதை அனுமதியோம். வெளியாரின் தலையீடுகள் வேண்டாம்.
மீண்டும் இனமுரண்பாட்டை வளர்ப்பதற்கு முயற்சிக்காதே! நாங்கள் இலங்கையராக இருப்போம்.! பிரிக்காதே பிரிக்காதே எங்களைப் பிரிக்காதே! அமெரிக்காவே! அமைதியைக் குழப்பாதே! எப்போதும் நாங்கள் இலங்கையரே! பிரிக்க முடியாது பிரிக்க முடியாது  இலங்கையர் எம்மைப் பிரிக்கவே முடியாது. சமாதானத்தைப் பாதுகாப்போம் – வெளியாரின் வலைகளில் வீழ மாட்டோம்! அமைதியைக் குழப்பாதே அமெரிக்காவே! எங்களுக்குத் தேவை நிரந்தரத் தீர்வே! அழிவிலிருந்து நிமிர உறவுக்குக் கரம் கொடுப்போம் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன .
இலங்கையில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் குரோத உணர்வை ஏற்படுத்தி கலங்கிய குட்டையில் காலூண்ட முயலும் மேற்கத்திய சக்திகளுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!