animated gif how to

அல் குர்ஆன் பிரதிகளை எரித்த அமெரிக்க படைக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இன்று ஏழுபேர் வபாத்

February 22, 2012 |


ஆப்கானிஸ்தானி இன்று இடம்பெற்ற அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது ஆப்கான் கர்சாய் படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஏழு பேர் வபாத்தாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
காபூலின் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஒரு அமெரிக்க படைத்தளத்தின் முன்னர் குவிந்த மக்கள் அமெரிக்கா ஒழிக, ஒபாமா ஒழிக போன்ற கோஷங்களை எழுப்பி அந்த படைத்தளத்தின் மீது கற்களை எறிந்துள்ளனர். ஜலாலாபாதில் அதிகமாக அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அமெரிக்கா இராணுவம் தான் தடுத்து வைதிருப்பவர்களிடமிருந்து கைப்பற்றிய அல் குர்ஆன் பிரதிகள உட்பட புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் மன்னிப்பு கோரியுள்ளது .அல் குர்ஆன் எரிப்பு ,அவமதிப்பு சம்பவங்கள் அமெரிக்க வதை முகாம்களில் அதிகமாக இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது . ஆர்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!