-F.M.பர்ஹான்-
அழைப்பாளர்கள் என்ற அடிப்படையில் ஆழமான பரந்து விரிந்த கல்வித் தரமுள்ளவர்களாக இந்நாட்டுஅரபுக்கல்லூரிகளின் பட்டதாரிகளை மேம்படுத்தும் இலக்கைக் கொண்டு பாரம்பரிய ஷரீஆக் கலைகளையும் நவீன கல்விசார் துறைகளையும் உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள மௌலவி டிப்ளோமா துறையில் உயர்கல்வி
கற்கைநெறி அல்லாஹ்வின் உதவியால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20.01.2012 வெள்ளிக் கிழமை வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அதிபர் டப்ளியூ .தீனுல் ஹஸன் (பஹ்ஜி)தெரிவித்தார்.
ஒரு வருடகால எல்லையைக் கொண்ட முற்றிலும் இலவசமான வதிவிடக் கற்கை நெறியான குறித்த பாடநெறி காலி இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரியினுள் ஒரு பிரத்தியேகப் பிரிவாக இயங்கவுள்ளதுடன் மாணவர்களுக்குமாதாந்தம் விசேட கொடுப்பனவு வழங்கப்படும்.
குறித்த இக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்து சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பாரிசில்கள் வழங்கப்படும் என காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அதிபர் மேலும்; தெரிவித்தார்
மேற்படிகற்கை நெறியில் இணைய விரும்பும் பின்வரும் தகைமைகளைப் பெற்றிருப்பதுடன் இப்னுஅப்பாஸ் அரபுக் கல்லூரி,த. பெ. இல.: 105, ஹிறிம்புற குறுக்கு வீதி காலி எனும் விலாசத்திற்கு தாமதிக்காது விண்ணப்பிக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.
- இக்கற்கை நெறியில் சேர விரும்பும் மாணவர்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரபுக்கலாசாலை ஒன்றில் பட்டம் பெற்றிருத்தல்’
- இறுதிப்பரீட்சையில் மிகநன்று(جيد جدا)தரத்தில் சித்தியடைந்திருத்தல்’
- 25 வயதிற்குஉட்பட்டிருத்தல்’
- அடிப்படை ஆங்கில மொழியறிவும் அரபுமொழியை சிறப்பாகக் கையாளும் திறமையுமுள்ளவராயிருத்தல் முதலிய தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 0777921418, 0773418432 ஆகிய தொலைபேசி மூலமாகவும் ibnuabbas.galle@gmail.com எனும் மின்னஞ்ஞல் மூலமாகவும் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அதிபர் டப்ளியூ .தீனுல் ஹஸன் (பஹ்ஜி)தெரிவித்தார்.
0 கருத்துரைகள் :
Post a Comment