animated gif how to

ஈரான் அணுவிஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரோஷன் படுகொலை!

January 11, 2012 |

ஈரான் நாட்டின் நதான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரோஷன் இன்று காலை படுகொலைச் செய்யப்பட்டார். இவரது கொலையின் பின்னணியில் மொசாத், சி.ஐ.ஏவின் கரங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஈரான் அணுகுண்டு தயாரிப்பதாக குற்றம்சாட்டி அந்நாட்டிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்து வருகின்றன. இந்நிலையில் ரோஷனின் கொலை மேற்காசியாவில் பதட்டத்தை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

ரோஷன் ஈரானின் பிரபல ஷரீஃப் பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியலில் பட்டம் பெற்றவர். நதான்ஸில் நியூக்ளியர் இன்ஸடலேசன் மையத்தில் மார்க்கெட்டிங் டெபுட்டியாக பணியாற்றி வருகிறார். ரோஷன் இன்று காலை டெஹ்ரானில் அல்லாமே தபத்தாபாய் பல்கலைக்கழகத்திற்கு அருகே சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை ரோஷனின் கார் மீது ஒட்டியுள்ளனர். அந்த குண்டு வெடித்ததில் ரோஷன் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த இருவர் காயமடைந்தனர்.
தனது அணு உலைகள், அணு ஆயுதங்களுக்கான யுரேனியத்தை வாயுக்களைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து வருகிறது ஈரான். இந்தத் தொழில் நுட்பத்துக்குத் தேவைப்படும் பாலிமெரிக் மெம்பரேன்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் 29,2010 அன்று ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தின் இப்போதைய தலைவரான பிரேயதோன் அப்பாசி மற்றும் பேராசிரியர் மாஜித் ஷஹ்ரியாரி ஆகியோர் இதே போன்ற குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகினர். அதில்
ஷஹ்ரியாரி கொல்லப்பட்டார். அப்பாஸியும் அவரது மனைவியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
கடந்த டிசம்பர 2,2010 அன்று இஸ்ரேலின் மொஸாத், அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் பிரிட்டீஷின் MI6 ஆகிய உளவு அமைப்புகள் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக ஈரான் உளவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், டெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஸூத் அலி முஹம்மதி கொலைச் செய்யப்பட்டார்.



0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!