-ஹிஷாம் ஹுஸைன்-
‘கிலி கொள்ளச் செய்யும் கிலாபத்’ எனும் திரைக் கதைக் கட்டுரையின்
‘கிலி கொள்ளச் செய்யும் கிலாபத்’ எனும் திரைக் கதைக் கட்டுரையின்
மூல செய்தி விவரணமும் அதன் தமிழாக்கமும்.
செய்திக் குறியிசை ஒலிக்கின்றது.
ஆண் செய்தியாளன்:
“அரபு வசந்தம் மத்திய கிழக்கில் ஜனநாயத்தை உருவாக்கலாம் என உலகம் எதிர்பார்க்கின்றது. எனினும் அது முற்றிலும் வித்தியாசமான வேறொன்றைத் தோற்றுவிக்கலாம்…. அனைவருக்கும் மாலை வந்தணங்கள், நான் லீ வெப்.”
பெண் செய்தியாளினி:
“நான் வெண்டி கிரிப்பித். பல தசாப்தங்கின் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதன் முதலாவது சுதந்திரத் தேர்தலில், டியுனீசியாவின் முன்னணி இஸ்லாமியக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. இது ஜனநாயகமல்ல ! இஸ்லாம் தான் இப் பிராந்தியத்தை ஆளுமென்பதற்கு இன்னுமொரு சமிஞ்சை என சிலர் கருதுகின்றனர் … இஸ்லாமிய கிலாபத்தை மீளமைப்பது பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளதாக எமது செய்தியாளர் க்ரிஸ் மிச்சல் கூறுகின்றார்.”
காட்சி மாற்றம்
(துருக்கி, இஸ்தான்பூல் நீல பள்ளிவாசல்.)
பின்னணிக் குரல்:
‘பதினான்கு நூறாண்டுகளுக்கு முன் முஹம்மத் மரணித்த போது, தூதரின் இடத்தை நிறப்பும் ஒருவர் முஸ்லிம் உலகுக்குத் தேவைப்பட்டார்’.
காட்சி மாற்றம்
ஒரு வயோதிப ஆண்:
“கிலாபத் தான், இஸ்லாத்தின் தூதர் முஹம்மதின் மரணத்தின் பின்னரான இஸ்லாத்தின் தலைமைத்துவம்”.
காட்சி மாற்றம்
(துர்கி, இஸ்தான்பூல் நீல பள்ளிவாசலின் பின்னணியில் செய்தியாளர் க்ரிஸ் மிச்சல்)
“இறுதி கிலாபத் துருக்கியில் இஸ்தான்பூலில் அமைந்திருந்தது. எனக்குப் பின்னால் தெரிகின்ற இஸ்லான்பூலும் டொப்காபி மாளிகையும் தான் முஸ்லிம் உலகின் அரசியல் மத்திய நிலையமாக கடந்த நானூறு வருடங்களாக விளங்கியது. 1517 முதல் 1 ஆம் உலகப் போரின் பின் பேரரசு வீழ்ச்சியுறும் வரை, உதுமானியப் பேரரசின் கலீபாக்களாக துருக்கிய மன்னர்கள் இங்கிருந்து ஆட்சி செய்தனர்.”
காட்சி மாற்றம்
(உதுமானிய கிலாபத்தின் இறுதி கலிபா மன்னர் 5 ஆம் சுல்தான் அப்துல் ஹமீது நாட்டை விட்டு வெளியேறும் வைப்பகக் காட்சிகள்.)
பின்னணிக் குரல்:
“எனினும் 1924 இல் துருக்கியின் தலைவர் அதா துர்க் கிலாபத்தை இல்லாதொழித்ததிலிருந்து பல முஸ்லிம்கள் அதன் மீள் வருகையைக் கனவு கண்டனர்.”
காட்சி மாற்றம்
மோஷ் ஷரொன் – இஸ்லாம் பற்றிய நிபுணர், ஹீப்ரூ பல்கலைக் கழகம் :
“கிலாபத்தின் பிரதான அம்சம் உலகத்தை ஆளுவது. இதனை கலீபாவின் ஒருவரின் தலைமைத்துவத்தின் கீழ் சாத்தியப்படுத்தலாம், அவர் புனிதப் போரை ஜிஹாதைப் பிரகடணப்படுத்தக்கூடியவராக இருப்பார்.”
காட்சி மாற்றம்
(பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும் காட்சிகள்.)
பின்னணிக் குரல்:
‘கிலாபத்தின் மீளமைப்பு இஸ்லாமியக் குழப்பங்களைக் கட்டுப்படுத்தும் என சிலர் நம்புகின்றபோதிலும் பல நவீன இஸ்லாமியக் குழுக்கள் எவ்வகையிலாவது கிலாபத்தை மீளமைக்கும் இலக்கினை நோக்கி மேற்கொள்ளும் தந்திரோபாயங்கள் குறித்து வேறு கருத்தினைக்கொண்டுள்ளனர்.’
காட்சி மாற்றம்
(பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்படுகின்றது):
‘அவர்கள் கூறுபவை தாலிபான், அல் கயீதா, ஹமாஸ், ஹிஸ்புத் தஹரீர் மற்றும் இவர்களுக்கெல்லாம் முப்பாட்டன் முஸ்லிம் சகோதரத்துவம்.’
காட்சி மாற்றம்
கென் டிம்மர்மன் – ஈரானில் ஜனநாயத்திற்கான மன்றம் :
“அதா துர்கினால் முஸ்லிம் கிலாபத் இல்லாமலாக்கப்பட்டு நான்கு வருடங்களின் பின் 1928 இல் முஸ்லிம் சகோதரத்துவம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், கிலாபத்தை புனரமைப்பதென்ற குறிப்பிட்ட பணிக்காக, சற்றே நான்கு வருடங்களின் பின் ஸ்தாபிக்கப்பட்டது முதல் அப்பணியினை முன்னெடுக்கின்றனர். அவர்களின் பணி இலக்கு ஓர் சர்வ உலக இஸ்லாமிய அரசை உருவாக்குவதாகும்.”
காட்சி மாற்றம்
(முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் செய்தியாளர் மாநாடு தொடர்பான காட்சிகள்.)
பின்னணிணிக் குரல்:
‘தற்போது எகிப்தில் சகோதரத்துவத்திற்குக் கால் பதிக்க இடம்கிடைத்துள்ளது. முபாரக் அரசாங்கத்தின் வீழ்ச்சியுடன் அந்நாட்டின் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சியாக அது உள்ளது.’
காட்சி மாற்றம்
கென் டிம்மர்மன்:
“முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எதனைக் காண விரும்புகின்றது என்றால், அணுவாயுதப் பலத்துடனான பலமான அதிகாரமுள்ள சர்வ உலக இஸ்லாமிய அரசை. அவை பாகிஸ்தானிலிருந்தோ, ஈராக்கிலிருந்தோ, ஈரானிலிருந்தோ வழங்கப்பட்டலாம் பரவாயில்லை, பின்னர் அவர்கள் கிரித்தவர்களையும் யூதர்களையும் மற்றும் கிரித்தவ யூத அரசாங்கங்களின் செல்வாக்கினையும் கிரமமாக தாக்கியழித்து விடுவார்கள்.”
காட்சி மாற்றம்
(துருக்கியத் தேர்தலுடன் தொடர்பான காட்சிகள்)
பின்னணிக் குரல்:
‘கிலாபத்தை மீளமைக்கும் ஆவல்கொண்ட இன்னுமொரு சாத்தியமான அதிகார ஆட்டக்காரர், துருக்கிய பிரதமர் எர்துகான்.’
காட்சி மாற்றம்
கென் டிம்மர்மன்:
“நான் நினைக்கின்றேன், எர்துகான் தன்னை புதிய கிலாபத்தின், துருக்கியை அதன் மைத்திய நிலையமாகக்கொண்ட உலக இஸ்லாமிய அரசின் ஸ்தாபகராக தெளிவாகக் காணுகின்றார் என்று. உதாரணமாக காஸாவுக்கு வருகைத் தரவிருந்த சமாதான கப்பலின் பாதுகாப்பிற்கு துருக்கியின் கடற்படையை அடிக்கடி அனுப்பிவைத்ததன் பின்னணியில் அதுதான் இருந்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்.”
காட்சி மாற்றம்
மோஷ் ஷரொன்:
“நான் உறுதியாகச் சொல்வேன் அவரது மனதில் கிலாபத்தை மீளமைப்பது பற்றி கனவு காணுகின்றார் என்று”.
காட்சி மாற்றம்
(எர்துகான் தொடர்பான காட்சிகள்)
பின்னணியில் மோஷ்ஷின் குரல்:
‘அவர் அவ்வாறுதான் நடந்துகொள்கின்றார், அதாவது இந்தப் பிராந்தியத்தை மாபெரும் யுத்தத்திற்குள் வெகு சுலபமாக தள்ளிவிட அவரால் முடியும்.’
காட்சி மாற்றம்
(ஆயுத படையணிகள், புரட்சியாளர்களின் காட்சிகள்)
பின்னணியில் குரல்:
‘இஸ்லாத்தின் தலைமையிலான போர் ஒன்று உருவாகும் அச்சுருத்தல் நிலவுகின்றதால் ‘அரபு வசந்தம்’ என்றழைப்பதே பிழையான பிரயோகமென்பது பரவலான கருத்தாகும்.’
மோஷ் ஷரொன்:
“இதனை அரபு வசந்தம் என நான் கூற மாட்டேன். இது அரபு வசந்தத்தை விட தூரமான அதே வகையிலான உறைக் குளிர் காலம்”.
காட்சி மாற்றம்
CBN தொலைகாட்சிக் கூடம்
லீ வெப்:
“மலேசியாவில் எமது தலைமையகத்திலிருந்து பயங்கரவாத மதிப்பீட்டு நிபுணர் எரிக் ஸ்டெகல்பெக் எம்மோடு இணைந்துகொள்கின்றார்.”
(திரையில் இருவரின் முகங்களும் தோன்றுகின்றன)
லீ வெப்:
“எரிக், இவை அனைத்தும் எனக்கும் நிச்சயமாக எமது பார்வையாளர்களுக்கும் புதிவையாகவும் கவனத்தை ஈர்ப்பவையாகவும் இருக்கின்றன. கிலாபத்தின் மீளமைப்பு எவ்வாறான அச்சுருத்தல்ளை உலகுக்கு வழங்கலாம்?”
எரிக் ஸ்டெகல்பெக் – பயங்கரவாத மதிப்பீட்டு நிபுணர்:
“நீங்கள் இதனைக் கற்பனை செய்து பாருங்கள். அனைத்து இஸ்லாமிய நாடுகளும் பலமான பொருளாதார, அரசியல், இராணுவப் படையுடன் தனியொரு சக்தியாக இணைந்த காட்சியொன்றைக் கற்பனையில் கொண்டு வாருங்கள். கற்பனை செய்யுங்கள் ஈரான், எகிப்து, துருக்கி, சவுதி அரேபியா, ஜோர்தான், சிரியா தமது வளங்கள் அனைத்தையும் ஒன்றாகக் குவித்து, ஸுன்னி ஷியா பிரிவினைகளை ஒதுக்கிவிட்டு தனியொரு உச்ச உலக தேசத்தை அவர்கள் உருவாக்கி இஸ்ரேலையும் மேற்கையும் கட்டுப்படுத்துவதற்கு கிலாபத் தலைமை தாங்கும். அதுமட்டுமல்ல அவ்வாறான பலமான இஸ்லாமிய சக்தியொன்று மத்திய கிழக்குக்கு எதிராக மட்டுமல்ல மேற்கிற்கு எதிராகவும் ஐக்கிய அமெரிக்காவை பிரதான குறிவைத்தும் ஏற்படுத்தும் பாதிப்பை கற்பனை செய்யுங்கள்.”
லீ வெப் :
இந்த அபாயத்தை ஒபாமா நிருவாகம் இனங்காணவில்லை என்று நீங்கள் கருதுகின்றீர்களா ?
எரிக் ஸ்டெகல்பெக் – பயங்கரவாத மதிப்பீட்டு நிபுணர்:
“அவர்கள் கண்டார்களோ இல்லையோ, கொள்கை முடிவுகளினால் புதிய கிலாபத்துக்கான தளத்தை இடுவதற்கு அவர்கள் உதவி செய்கின்றார்கள். ஒன்று, எகிப்தில் ஹொஸ்னி முபாரக்கின் வெளியேற்றத்தின் மூலம் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு பாதையை சமைத்துக்கொடுத்தார்கள், லிபியாவின் கட்டாபியை; ரொம்ப மோசமானவன் சந்தேகமே இல்லை ஆனால் அதை விட மோசமான தீவிரவாத இஸ்லாமியக் குழுவுக்கு பாதை சமைத்தார்கள், டியுனிஸியாவில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அரபு வசந்தம் எனக்கூறுவதின் முதலாவது சுதந்திர தேர்தலில் தீவிரவாத இஸ்லாமியக் கட்சி வெற்றியீட்டியது. ஆக இந்த ஒவ்வொரு சம்பவத்திலும் ஒபாமா நிருவாகம் புரட்சிக்கு உதவியது, அரபு வசந்தத்திற்கு உதவியது இந்த ஒவ்வொரு சம்பத்திலும் முன்னைய அரசாங்கங்களை விட தீவிரமான இஸ்லாமிய குழுக்கள் அரசாங்கங்களைக் கைப்பற்றுகின்றன.”
லீ வெப் :
“நான் பிழையென்றால் திருத்துங்கள் நான் நினைத்தேன்; நான் வாசித்தேன் மிதவாத இஸ்லாமிய அரசாங்கம் டியுனிஸியாவைக் கைப்பற்றியதென்று”
எரிக் ஸ்டெகல்பெக்:
“நானும் தான் எனது வாழ் நாளில் ஒரு மிதவாத இஸ்லாமியனைச் சந்திக்க விரும்புகின்றேன். இஸ்லாமியவாதி இஸ்லாமியவாதிதான். நீங்கள் ஜிஹாதுக்கு, ஷரிஆவுக்கு, யூத மக்களின் வெளியேற்றத்திற்கு உதவுவீர்கள் என்றால் எனது புத்தகத்தில் நீங்கள் கூட மிதவாதி அல்ல. பிரச்சினையே இதுதான், அமெரிக்க அரசாங்கம் கருதுகின்றது முஸ்லிம் சகோதரத்துவத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றது உண்மையான மோசமானவர்களான அல் கயீதாவுக்கு சமபலமானது என்று. நான் சொன்னதைப்போல ‘இஸ்லாமியவாதி இஸ்லாமியவாதிதான்’. இறுதியில் அவர்கள் ஒருனை வெடிக்க செய்யவிட்டாலும் கூட அவர்களின் ஆட்டத்தின் இறுதி அடி அவர்கள் பேசிக்கொள்ளும் கிலாபத் தான், இஸ்லாமிய ஷரிஆ சட்டம் ஒன்று மட்டும் தான்.”
லீ வெப் :
எரிக் உங்கள் அகப்பார்வைக்கு நன்றி நாம் அதை பெருமதிக்கின்றோம்.
இது தூனீஷிய தேர்தலைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஒரு விவரணம். அரேபிய வசந்தத்தின் ஊடாக பழைய அரபுத் தலைமைகள் நீங்கி தமக்கு விசுவாசமான புதிய தலைமைகள் தோன்றும் என எதிர்பார்த்த மேற்கின் ஊதுகுழலுக்கு நெத்தியடி கொடுத்திருக்கிறது தூனீஷிய தேர்தல், இனி, போராளிகள் – கிளர்ச்சிக்காரர்கள் என்றழைக்கப்பட்டவர்கள், பயங்கரவாதிகள், கிலாபத்வாதிகள் என்று அழைக்கப்படுவது ஒன்றும் அதிசயமில்லையே!
இனி, அரபு வசந்தத்தின் எட்டும் ஒவ்வொரு வெற்றியும் கிலாபத்தின் கதவுகளைத் தட்டும் ஓசையாகவே இத்தகைய மீடியாக்களால் பார்க்கப்படலாம்.
0 கருத்துரைகள் :
Post a Comment