animated gif how to

சமய தீவிரவாதிகளுக்கு குவைத் நிதி வழங்குவதாக கூறவில்லை: அலவி

January 04, 2012 |

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுபி முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் சமய தீவிரவாதிகளுக்கு குவைத் அரசு நிதி வழங்குவதாக எந்தவொரு சந்தர்ப்பதலும் தான் கூறவில்லை என மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் யூசுப் அல்அதீகினால் வழங்கப்பட்ட ஊடக அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஆளுநர் அலவி மௌலானா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

"அந்த அறிக்கையில் என்னால் கூறப்பட்டதாக ஒரு கூற்று உள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள சுபி முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் சமய தீவிரவாதிகளுக்கு குவைத் அரசு நிதி வழங்குவதாக நான் எந்தவொரு சந்தர்ப்பதலும் நான் கூறவில்லை. 

அத்துடன் வேறு எந்த மத்திய கிழக்கிலுள்ள அரபு நாடுகள் தொடர்பிலும் குறிப்பிடவில்லை. எனது கருத்து முற்று முழுதாக திரிவுபடுத்தப்பட்டு பிழையாக அறிக்கையிடப்பட்டுள்ளது. 

60 வருட அரசியல் அனுபவமுள்ள எனக்கு இலங்கை மக்களின் மனநிலை நன்கு தெரியும். நான் வேறு நாடுகளுடன் இலங்கைக்கு நல்லுறவை கெடுக்கும் வகையிலான ஒரு அறிக்கையை விடுவேன் என கருதுவது அபத்தமானது.
-தமிழ்மிரர்-


தொடர்புடை செய்தி:
அலவி மௌலானாவின் கருத்துக்கு குவைத் தூதரகம் கண்டனம்!

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!