கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுத குழுக்களுக்கு குவைத் உதவுவதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா அண்மையில் ஊடகங்களுக்க தெரிவித்தமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கைக்கான குவைத்து தூதுவர் யாகூப் யூசுப் அலாதீக் தெரிவித்தார்.
ஆளுநர் அலவி மௌலானாவின் கருத்து தொடர்பில் கொழும்பிலுள்ள குவைத் தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டடுள்ளதாவது,
"கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுத குழுக்களுக்கு குவைத் உதவுதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.
குவைத் அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரம் உதவி செய்யவில்லை. இலங்கையிலுள்ள மக்கள் அனைவருக்குமே உதவி செய்கின்றோம்.
இந்த உதவிகள் மனிதாபிமான, கல்வி மற்றும் அபிவிருத்தி போன்ற துறைகளுக்கே வழங்கப்படுகின்றதே தவிர வேறு எந்த நோக்கங்களுக்காகவும் வழங்கப்பட்டவில்லை".
சுபி முஸ்லிம்களுக்கு எதிராக போராடுவதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆயதங்களை கொள்வவு செய்வதற்காக குவைத் உள்ளடங்களாக மத்திய கிழக்கு நாடுகள நிதியுதவிளிப்பதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா அண்மையில் தெரிவித்திருந்தமைமை குறிப்பிடத்தக்கது."
0 கருத்துரைகள் :
Post a Comment