லிப்டன் இரண்டாமிடத்திற்கு பின்னடைவு!
2011 இல் இடம்பெற்ற மொத்த தேயிலை விற்பனையில் அக்பர் பிரதர்ஸ், உலகின் மிகச் சிறந்த தேயிலை ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. முன்னணி சர்வதேச தேயிலை வியாபார நிறுவனமான லிப்டனை இரண்டாம் நிலைக்குத் தள்ளி, அக்பர் பிரதர்ஸ் இந்த அடைவை எய்தியுள்ளது.
பல ஆண்டுகளாக இலங்கையின் தேயிலை சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் அக்பர் பிரதர்ஸ், பல சவால்களுக்கு மத்தியிலேயே உலகளவில் இந்த நிலையை அடைந்துள்ளது.
பல ஆண்டுகளாக இலங்கையின் தேயிலை சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் அக்பர் பிரதர்ஸ், பல சவால்களுக்கு மத்தியிலேயே உலகளவில் இந்த நிலையை அடைந்துள்ளது.
குறிப்பாக தேயிலைப் பயிரில் ஏற்பட்ட வீழ்ச்சி, வெளிநாட்டு நாணயமாற்று வீத அதிகரிப்பு, பிரதான தேயிலை அருந்தும் வலயங்களில் – குறிப்பாக மத்திய கிழக்கில் - ஏற்பட்ட அசாதாரண நிலமைகள், உலகப் பொருளாதார வீழ்ச்சி என்பவற்றிற்கு மத்தியிலேயே இது இடம்பெற்றுள்ளது.
2011 இல் 52.2 மில்லியன் கிலோ தேயிலையை அக்பர் பிரதர்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது. லிப்டன் ஆபிரிக்கா, 48.4 மில்லியன் கிலோவை ஏற்றுமதி செய்துள்ளது.
2011 இல் 52.2 மில்லியன் கிலோ தேயிலையை அக்பர் பிரதர்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது. லிப்டன் ஆபிரிக்கா, 48.4 மில்லியன் கிலோவை ஏற்றுமதி செய்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment