ஈரான் மீதான ஒருதலைபட்ச தடையை திணிப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சட்டங்களை சர்வதேச சட்டங்கள் மீது திணிக்கும் வேலையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்வதாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹோங் லெ தெரிவித்துள்ளார். ஈரானுடன் பொருளாதார ரீதியான உறவு தொடரும். மேலும் எரிசக்தி துறையிலும் உறவு தொடரும் என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, துருக்கியும் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவுதோக்லு புதன்கிழமை ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கு சென்றார். இரண்டு தின சுற்றுப்பயணத்தில் அவர் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹியுடன் சந்திப்பை நடத்துவார் என துருக்கி அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment