இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள,தென்னாசியாவிலே மிக உயரமான பல்தொழிற்பாட்டு தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அடிக்கல் நாட்டவுள்ளார்.
“கொழும்பு லோட்டஸ் ரவர்” என பெயரிடப்பட்ட நான்கு தட்டு மேடைகளை கொண்ட இந்த 350 மீட்டர் உயரமுடைய கோபுரமானது கொழும்பு டாக்டர். விஜேவர்த்தன மாவத்தையில் 3.06 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பீடத்திலிருந்து இக்கோபுர நிர்மாணிப்புக்கான தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்டடத்திற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஆணையத்தால் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் நிர்மாணப்பணிகளை 30 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கோபுரத்திலிருந்து ஐம்பது வரையான ஔிபரப்பு, ஒலிபரப்பு சேவைகள் வழங்கப்பட இருப்பதுடன் தொலைத்தொடர்பு துறையில் இருபது வரையான சேவைகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment