பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகறாறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள். பிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான வழக்குகளின் போது முஸ்லிம்கள் அல்லாதவர்களும் ஷரியா அமைப்புகளை பெருமளவில் நாடுவதாக கூறப்படுகின்றது.
1982ம் ஆண்டில் இருந்து ஷரியா கவுன்சில் முறை இயங்கிவரும் பிரிட்டனில் கிட்டத்தட்ட 85 ஷரியா நீதிமன்றங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது. ஷரியா இஸ்லாமிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் அறிஞர்கள் வழக்குகளுக்கு இங்கு தீர்ப்பு வழங்குகின்றனர்.
இதேவேளை, பிரிட்டனில் ஷரியா நடைமுறைகள் பெண்ணுரிமைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறும் சில பெண்ணுரிமை அமைப்புகள் அந்த நடைமுறைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.- BBC Tamil
0 கருத்துரைகள் :
Post a Comment