(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
2011ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து 135 மாணவர்கள் சகல துறைகளிலுமிருந்து பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் கணிதப்பிரிவில் எம்.எச்.எம்.ஸஸ்னி, எம்.எச்.எம்.முர்ஸித், உயிரியல் பிரிவில் எம்.ஜே.சாமித் ஸீத், கலைப்பிரிவில் கே.எல்.றியாஸ் அஹமட், எம்.ஏ.எம்.முஹாஜிர் ஆகியோர் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர்.
பொறியியல்த் துறையில் 13 மாணவர்களும் மருத்துவத் துறையில் 3 மாணவர்களும் விவசாயத் துறையில் 5 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞானத் துறையில் 5 மாணவர்களும் பௌதீக விஞ்ஞானத் துறையில் 25 மாணவர்களும் வர்த்தக முகாமைத்துவத் துறையில் 8 மாணவர்களும் கலைத்துறையில் 7 மாணவர்களும் எஞ்சிய மாணவர்கள் ஏனைய துறைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கணிதத் துறையில் எம்.எச்.எம்.ஸஸ்னி முதலாம் இடத்தைப் பெற்றும் தேசிய ரீதியில் 169ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் இக்கல்லூரியிலிருந்து பொறியியல்த் துறைக்கு அம்பாறை மாவட்டத்தில் முதனிலை உட்பட 17 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment