December 02, 2011.... AL-IHZAN World News
இவ்வாறு அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
நடந்து முடிந்த எகிப்திய பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்களிப்பில் இதுவரை கிடைக்கப் பெற்ற தேர்தல் முடிவுகளின் படி இஃவானுல் முஸ்லிமீன் (முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்) தலைமையிலான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 40 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 7 மாவட்டங்களுக்கான இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இவ்வனைத்திலும் சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியே முன்னிலை வகிக்கின்றது.
மாவட்ட அடிப்படையிலான தேர்தல் பெறுபேறுகளின்படி 1 ஆம் 2 ஆம் நிலையிலுள்ள கட்சிகளின் மொத்த வாக்குகள்.
மாவட்டம்
|
FJP
|
AN-Noor
|
Al-Wasath
|
திம்யாத்
|
86,268
|
80,936
| |
கஃப்ர் ஷெய்க்
|
92,950
|
67641
| |
செங்கடல்
|
40,606
| ||
பூர் ஸயீத்
|
95,517
|
60,879
| |
அக்ஸர்
|
118,678
|
50,552
| |
பையூம்
|
198,000
|
128,000
| |
உஸ்யூத்
|
124,881
|
65,591
|
இதேவேளை சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் தேர்தல் முடிவுகள் பின்வரும் அம்சங்களைப் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளது.
- எகிப்திய மக்கள் சிவில் நிறுவனங்கள் ஊடாக தமது தேசத்தைக் கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் சக்திபெற்றிருக்கிறார்கள்.
- எகிப்தில் ஸ்திரத்தன்மை நிலவுவதோடு புரட்சியின் இலக்குகள் சாத்தியப்படுவதை இவை உறுதிப்படுத்துகின்றன.
- மக்கள் தாமாகவே உணர்ந்து முன்னைய ஆட்சியின் எச்ச்சொச்சங்களை அரசியலில் இருந்து ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.
- எகிப்தின் எதிர்காலம் ஒரு கட்சியுடனோ அல்லது ஒரு சிந்தனைப் போக்குடனோ கட்டுப்பட்டிருக்காது. கட்சிகளையும் அரசியல் சக்திகளையும் சுயாதீன நபர்களையும் உள்ளடக்கிய இந்நாட்டுக்காக தூய்மையாக உழைப்பவர்களுக்கே இந்நாடு கட்டுப்படும் என்பதை இத்தேர்தல் வலியுறுத்தியிருக்கிது.
இவ்வாறு அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
0 கருத்துரைகள் :
Post a Comment