December 03, 2011.... AL-IHZAN World News
இஸ்தான்புல்: பேஸ்புக்கின் மாதிரியில் முஸ்லிம் இளைஞர்களுக்காக சமூக இணையதளம் ஒன்று துவங்கவிருக்கிறது.
ஸலாம்வேர்ல்ட்.காம் www.salamworld.com என்ற பெயரிலான இணையதளம் அடுத்த வருடம் துவங்கும். முஸ்லிம் தொழிலதிபர்கள் சிலர் இத்திட்டத்தை துவக்க உள்ளனர். இளைஞர்களிடையே பொதுவான பார்வை மற்றும் இஸ்லாத்தின் விழுமியங்களை பரப்புரை செய்வதற்கு இந்த இணையதளத்தை துவங்க உள்ளதாக இதன் நிறுவனர்களில் ஒருவரான அஹ்மத் அஸிமோவ் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டில் இஸ்தான்புல்லை தலைமையிடமாக கொண்ட இந்த இணையளத்திற்கு மாஸ்கோவிலும், கெய்ரோவிலும் அலுவலகங்கள் செயல்படும். 30 நாடுகளில் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்படுவர். மூன்று வருடங்களுக்குள் 50 மில்லியன்(5 கோடி) பயனீட்டாளர்களை ஈர்க்க இயலும் என நம்புவதாக அஸிமோவ் கூறினார்.

0 கருத்துரைகள் :
Post a Comment