animated gif how to

ஈராக்கில் அண்டை நாடுகள் தலையிடக்கூடதாம்: ஒபாமா கூறுகிறார்

December 14, 2011 |

December 14, 2011.... AL-IHZAN World News

வாஷிங்டன்: பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்துகொண்டு ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் உள்விவகாரங்களில் முற்றிலும் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நாடு அமெரிக்கா. இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமா, சாத்தான் ஓதும் வேதம்போல ஈராக்கின் வளர்ச்சியில் அண்டை நாடுகள் தலையிடக்கூடாது என உபதேசம் செய்துள்ளார்.

ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்கள் சந்தித்த ஒபாமா, ஈராக்கில் இருந்து அமெரிக்கா இம்மாதம் முற்றிலும் வாபஸ் பெறும் என்றும், இது வரலாற்று நிமிடமாகும் என அவர் தெரிவித்தார்.

அதேசமயம், ஈரானை மறைமுகமாக சுட்டிக்காட்டித்தான் ஒபாமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என ஊடகங்கள் கூறுகின்றன.

ஈரான் பிரதிநிதிகளும், ஈராக் அதிகாரிகளும் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையும், 1980-ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை இருநாடுகளும் பரிமாறிக்கொள்ள தீர்மானித்ததும் அமெரிக்காவை கவலை அடைய
செய்துள்ளது.


எதிர்காலத்திலும் ஈராக்கிற்கு உதவி வழங்கப்படும் என்ற ஒபாமாவின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்த மாலிகி, சிரியா விவகாரத்தில் ஒபாமாவின் கருத்திற்கு மாறுபட்டார்.


சிரியாவின் விவகாரத்தை சமாதானமாக பரிசீலிக்க வேண்டும். பிரிவினை மோதல் ஈராக்கில் படர்ந்துவிடுமோ என அஞ்சுவதாக மாலிகி தெரிவித்தார். அரசியல், வர்த்தகம், கல்வி, இயற்கை வளங்களை தோண்டுதல் ஆகிய தேவைகளுக்கு வெளிநாட்டு வல்லுநர்களின் உதவி ஈராக்கிற்கு தேவை என மாலிகி தெரிவித்தார்.


ஈராக்கில் கொல்லப்பட்ட 4500 அமெரிக்க ராணுவத்தினரை அடக்கம் செய்துள்ள ஆர்லிங்டன் நேசனல் கல்லறையில் ஒபாமாவும், மாலிகியும் பூங்கொத்து வைத்தனர்.


அமெரிக்காவின் ஒன்பது வருட ஈராக் ஆக்கிரமிப்பில் 115000 ஈராக் மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!