animated gif how to

முஸ்லிம் காங்கிரஸில் இளைஞர்களை உள்வாங்கி பலப்படுத்துவோம்: மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்

December 14, 2011 |

December 14, 2011.... AL-IHZAN Local News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இளைஞர்களை உள்வாங்கி மீண்டும் கட்சியை பலப்படுத்த முயற்சிப்பதே எம்மெல்லோரினதும் கடமை என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாகாண சபை உறுப்பினர் முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுக்கும் விடுத்துள்ள வெள்ளி விழா அறைகூவலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டடுள்ளதாவது,


இந்நாட்டு முஸ்லிம்கள் தமது விகிதாசாரத்திற்கேற்ப கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, காணி பயன்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் இன்னோரன்ன சகல வசதிகளிலும் தன்னிறைவு அடையும் போதே நாம் உண்மையான சுதந்திரத்தைப் பெறமுடியும்.


நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த சகல ஆட்சியாளர்களும் சிறுபான்மையினருக்கான விகிதாசாரத்தைப் புறக்கணித்து அநீதியான முறையிலேயே ஆட்சி செய்தனர். தற்போதும் அவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


இதனை உணர்ந்த தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் தனி கட்சியமைத்துப் போராடிக்கொண்டிருந்த வேளையில் எமது முஸ்லிம் பிரதிநிதிகள் பேரினவாத கட்சிகளின் ஏஜன்டுகளாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.


இவ்வாறு பல காலங்களை கடந்துகொண்டிருந்த வேளையிலேயே மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இளைஞர்கள் மத்தியில் இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், பாதிப்புக்களையும் அட்டவணைப்படுத்தி பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் தாக்கமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆலவிருட்சமாகும்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் இந்த நாட்டின் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் சக்தியாக எமது முஸ்லிம் சமூகம் மாறியதோடு பாரிய பல அபிவிருத்திகளையும் செய்யக்கூடியதாக விருந்தது.


இதனையுணர்ந்த பேரினவாதிகள் கட்சிக்குள் பிளவுகளை உண்டுபண்ணி கட்சியை அழிக்கும் சதிமுயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். தலைவர் அஷ்ரபின் மரணம் பேரினவாதிகளின் சதி முயற்சிக்கு மிகவும் இலகுவாகிவிட்டது.


இன்று முஸ்லிம் காங்கிரஸ் பல கூறுகளாக பிரிந்து தெருவுக்கொரு கட்சி என்ற நிலமைக்கு வந்துவிட்டது. முஸ்லிம் காங்கிரஸை வளர்த்த சமூகம் இன்று முதுமையடைந்துகொண்டு வருகின்றது. இவ்வாறு பலவகையான இடையூறுகள் நடைபெற்றுள்ளபோதும் பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும்பெற்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே.


25 வருட வெள்ளி விழாவை கொண்டாடும் எமது கட்சி தலைவர் அஷ்ரபின் வழியில் புதிதாக இளைஞர்களை உள்வாங்கி இன்றைய எமது முஸ்லிம்களின் இழிவு நிலமைகளை அட்டவணைப்படுத்தி முஸ்லிம்களுக்கு பலம்வாய்ந்த ஒரேயொரு தனிக்கட்சியின் அவசியத்தை பயிற்சிப்பட்டறைகள் மூலமும் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மீண்டும் கட்சியைப் பலப்படுத்த முயற்சிப்பதே எம்மெல்லோரினதும் கடமையாகும்.


எனவே இந்த பணியை கட்சியிலிருந்து பிரிந்து சென்று சிறு கட்சிகளாக அரசிடம் சரணடைந்துள்ள கட்சி பிரமுகர்கள் உணர்ந்து முஸ்லிம் காங்கிரசின் ஆலவிருட்ச நிழலின் கீழ் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே எமது சமுக விடுதலையை நாம்பெறமுடியும்.


எனவே எமது சுயநலங்களையும், தாள்வு மணப்பான்மையையும் தூக்கிவீசிவிட்டு எமது கட்சியின் 25ஆவது ஆண்டு நிறைவில் ஒன்றுபட்டு செயற்பட திடசங்கற்பம் கொள்ளவேண்டும்.

2 கருத்துரைகள் :

Anonymous said...

Mr . A . M ஜெமீல் மற்றும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது சலாம் அஸ்ஸலாமு அழைக்கும். மிகவும் நல்லெதொரு அறைகூவல். நான் ஒன்று சொல்ல விரும்புவதாவது இந்த கட்சியின் தலைமை கிழக்கு மாகாணத்தில் இல்லாத போது கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு ஒன்று கூடுவது? பதவி ஆசை உள்ளவர்கள் தனது பதவியை தக்க வைத்துகொள்ள அவர்கள் விருப்பப்படி எது வேணுமெண்டாலும் செய்வார்கள் அதை கேட்கே மாட்டீர்கள் கட்சியை பலப்படுத்த வெளி ஊரானுக்கு தலைமை பட்டம் கொடுக்க ஆள் சேர்க்கின்றீர்கள? உங்களில் உங்கள் ஊரில் ஒரு படித்த தலைவன் இல்லாத போது உங்களுக்கு எதற்கு கட்சி எதற்கு கட்சி பலம்??? கிழக்கில் ஒரு தலைவனை உருவாக்கத்த பட்சத்தில் உங்கள் சமூகம் கண்டிராத தோல்விகளை எதிர்நோக்கும் சகோதரர்களே ... உங்கள் வாக்குகள் உங்கள் உரிமைகள் களவாடப்படுவதை பாமர மக்கள் அறிவதில்லை படித்த நீங்கள் அதற்கு தரகராக நிற்கவேண்டாம். உங்கள் தம்பி, தங்கச்சி, மகன், மகள் இவர்களுடைய எதிர்காலத்தை பாதுகாப்பது உங்கள் கடமை. வெளி ஊரான் வந்து கேட்பதில்லை. உங்கள் தற்போதைய தலைவரிடம் கிழக்கு மாகாணத்தில் வசிப்பிடத்தை அமைக்கி சொல்லுங்கள் பார்ப்போம் அவரின் விடை எவ்வாறு அமையும் தெர்யுமா? கல்வி மான்களே நீகளே உங்கள் சமூகம் பற்றி நாளை அல்லாஹ் கேட்பான் அதற்கு பதில் சொல்ல தயாராகுங்கள்.......

Anonymous said...

yo makkal edattil pirivinai valarkate ellam mudinji eppa orukkoru taivan vendumam goyyale onda vitamattum parkate SLMC eppotaya taivar singalavada or tamilana ni taivana matta soolla

இந்த கட்சியின் தலைமை கிழக்கு மாகாணத்தில் இல்லாத போது கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு ஒன்று கூடுவது?

ennada etu modattanamana kelvi ni school pohallaya

கிழக்கு மாகாணm enga somaliya laya irukku

ore nadu ore muslim enam கிழக்கு மாகாணm mattum india la illa atuvum sri lankala tan teriyati kettu terinjuko...

Post a Comment

Flag Counter

Free counters!