December 09, 2011.... AL-IHZAN Local News
இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாயில் முன்பாக நேட்டோ படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியம் இலங்கை மற்றும் இலங்கைவாழ் பாகிஸ்தான் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவுக்கும் நேட்டோ படைகளுக்கும் எதிராக பல்வேறு வாசகங்கள் பொறித்த சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment