animated gif how to

பாத்திமா நாயகி பற்றி - இந்திய தமிழ் (தினமலர்) ஊடகத்தின் கீழ்த்தரமான செய்தி

December 08, 2011 |

December 08, 2011.... AL-IHZAN India News
சுவர்கத்தின் தலைவியான முஹம்மது நபி ஸல்லள்ளாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புதல்வியான பாத்திமா ரலியள்ளாஹூ தஆலா அன்ஹா அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கிறது இந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான தினமலர்.  


இந்த தவறான செய்தியை வெளியிட்ட தினமலரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அத்தோடு அசிங்கமான செய்தியை வெளியிட்ட தினமலர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். 


உலக முதல்தர செய்தி தாள் என்று பொய்யுரைக்கும் தினமலர் வெளியிட்ட செய்தி இது.அந்த தினமல பத்திரிகையில் வெளிவந்த செய்தி பிரசுரமான திகதி 07-12-2011 பதிப்பு - சென்னை, பக்கம் - 04. 

தினமலர் சென்னை தொடர்பு எண்கள். முஸ்லிம்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்யுங்கள் 
Mobile No: – 9944309600, Ph: 044 2841 3553, 2855 5783044-24614086
Email: dmrcni@dinamalar.in



தினமலர் இணையதள (screen shot)
வரலாற்று உண்மை என்ன?

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாசத்துக்குரிய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் நபியவர்கள் இறந்த ஆறு மாதத்திற்கு பிறகு இயற்கையான முறையில் இறந்தார்கள்.அப்போது அவரது மகன்கள் ஹசன் (ரலி),ஹுசைன் (ரலி) இருவரும் சிறுவர்கள் (புகாரி 3903)

ஹிஜ்ரி வருடம் 11ஆம் ஆண்டு ரமளான் மாதம் 3ம் நாள் செவ்வாய் இரவு பாத்திமா (ரலி) மரணித்தார்கள்(நூல்:அல் இஸாபா 11583)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அலீ (ரலி), ஃபழ்ல் (ரலி) ஆகியோர் கப்ரில் இறங்கி இரவில் அடக்கம் செய்தனர். (அல் இஸாபா 11583 பாகம் 2, பக்கம் 128)

பாத்திமா (ரலி) இறந்தது ஹிஜ்ரி 11ல் அவரது மகன் ஹுசைன் (ரலி) போரில் கொல்லப்பட்டது ஹிஜ்ரி 61-ல். கிட்டதட்ட 50 வருட இடைவெளி. கவனிக்கவும் இதுதான் தினமலர் செய்தி தரும் இலட்சணம்.

தற்கொலை செய்யக் கூடாது என்பதற்கான இஸ்லாமிய சட்டங்கள்.

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்(குர்ஆன்2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் (குர்ஆன்4:29)

கொஞ்சம் இந்த வீடியோக்களை பாருங்கள் தற்கொலை எப்படி முழுமையாக தடுக்கப்பட்ட (ஹாராம்) என்பதை Dr.Kvs ஹபிப் முஹம்மது விளக்குகிறார்
கற்பைக் காக்க தற்கொலை செய்யலாமா? என்ற கேள்விக்கு விரிவான விளக்கத்தை தருகிறார். மார்க்க அறிஞர் பி.ஜே அவர்கள்.


தினமலரின் மேல் ஆரம்ப காலகட்டங்களில் (1999 களில்) நல்ல அபிப்ராயம் இருந்தது. அறியாமல் எழுதுகிறார்கள் என்று நினைத்து அப்போது பெரிதாக இணையதள வசதியில்லாத காலம் என்பதால் பிளாக்கில் பின்னூட்டம் (கருத்துரை) எழுவதற்கு முன்பே சரியான நிலைப்பாடை விளக்கி வாசகர் கடிதங்கள் எழுதியிருக்கேன். அவர்கள் ஒன்றை கூட பிரசுரித்தது கிடையாது.


இது உங்கள் இடம் என்கிற பகுதியில் இஸ்லாத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தாக்கி வருகிற கற்பனை கதை பாணியிலான கடிதங்கள் வெளியாவதை பார்த்து தெளிவடைந்தேன். உதாரணத்திற்கு தாலி கட்டும் பழக்கம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு இது உங்கள் இடம் என்கிற இடத்தில் வருகிற பதிலை பாருங்கள்.


முகலாய மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து ஆட்சி செய்த போது கடைத்தெருவுக்கு வந்து திருமணம் முடிக்காத இந்து பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். தவறுதலாக திருமணமான பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடக்கூடாது என்பதற்காக தாலிக் கயிறு அடையாளமும் கட்டும் பழக்கமும் ஏற்பட்டது என்று ஒரு வாசகர்!? எழுதுகிறார். இது அந்த பகுதியில் வரவேற்பை பெறுகிறது. இந்த செய்தியை படிக்கிற சகோதர இந்துக்கள் தங்கள் மனைவியின் தாலியை பார்த்தால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அடியாளத்தில் ஏற்பட வேண்டும் என்கிற தந்திரத்தை புரிந்துக் கொண்டேன்.


அடுத்து ஒரு செய்தி. அப்போது பயர் என்கிற ஓர் பாலின உறவு கொள்கிற இளம் விதவைகளின் கதையை மையமாக கொண்ட படம் நந்திதாஸ் என்கிற நடிகை மேட்டுக்குடி உயர்ஜாதி பெண்ணாக நடித்து சர்ச்சைக்குள்ளான நேரம். இது உங்கள் இடத்தில் ஒரு வாசகர்!? கேள்வி கேட்கிறார். அதற்கு பதில்
முகலாய மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது அந்த இஸ்லாமிய பெண்களிடம் அந்த பழக்கம் இருந்தது. அப்படியே அந்த பழக்கம் இந்துப் பெண்களை தொற்றிக் கொண்டது என்று அதே முகலாய கதையை கைக்கூசாமல் வாசகர் என்ற பெயரில் விஷத்தை விதைத்தார்கள்.


அதற்கு கருத்தியல்ரீதியாக பதில் எழுதினேன். இஸ்லாத்தில் கணவன் இறந்து விட்டால் மறுமணம் செய்து வைத்து விடுவார்கள். மறுமணம் செய்து வைக்க மறுக்கிற சமூகத்தில் தான் லெஸ்பியன் / ஓர் பாலின உறவு தேவைப்படும் என்கிற ரீதியில் நான் எழுதிய வாசகர் கடிதங்கள் எந்த குப்பையில் கிடக்கிறதோ? தெரியவில்லை.


தினமலர் இலவச இணைப்பு சிறுவர் மலரில் குருபக்தி என்ற என்ற பட சிறுகதையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கற்பனையான உருவப்படம் வரைந்து நபித் தோழரான அபுபக்கர் (ரலி) அவர்கள்  நபியவர்கள் காலில் விழுந்து வணங்குவது போல் வரைந்திருந்தது.


நபியவர்கள் நடந்து வரும்போது மரியாதைக்காக எழுந்த நபித் தோழரின் தோளைப் பிடித்து அமுக்கி அமர சொன்னார்கள் நபிகளார். அவர்கள் காலில் விழுவதை அனுமதிப்பார்களா? காலில் விழுவதை இஸ்லாம் தடை செய்த விஷயமும் முஹம்மது நபிக்கு உருவம் வரையக்கூடாது என்கிற விஷயமும் தனக்கு தெரியாது என்று சமாளித்தது.


தினமலர் அளித்த விளக்கம் முழுப்பொய் என்பதை நிருபிக்கும் விதமாக டென்மார்க்கில் வெளியாகி பல கலவரங்களையும்  உயிர் பலியும் ஏற்படுத்திய முஹம்மது நபி உருவப்பட கார்டூனை தமிழ் பத்திரிக்கையில் அதுவும் ரமளான் மாதத்தில் வெளியிட்டு தன் உண்மை முகத்தை காட்டியது.


இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமல்ல இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூக மக்களை பற்றியும் இதே பாணியிலான செய்திகளை வெளியிடுவது அனைவரும் அறிந்த உண்மை


.உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தினமலரை தீக்குளிக்க வைத்த போது.

நியாய உணர்வுள்ள நடுநிலைவாதிகளும், சிறுபான்மை இன மக்களும் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மற்றும் தமிழினவாதிகளும் தினமலரை அம்பலப்படுத்தி புறக்கனிக்க வேண்டும்.
தொகுப்பு:-ஹைதர் அலி (வலையுகம்)

4 கருத்துரைகள் :

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர்களே பகிர்வுக்கு நன்றி
ஜஸாக்கல்லாஹ் கைர

M.M.SAJA.. said...

This s Bloody fucking news paper do your islam ok….don’t use my islam…fucker news paper

max said...

what a stupid do not do like this ok and islam respect other religion so thinamalar u do not want to criticize about prophet's daughter fatima

mohamed shiyam said...

தமிழ் நாட்டின் மிகே தரக்குறைவான நாள் இதல் என்பதை தினமலர் ஆணித்தரமாக அச்சுஅடித்து கட்டயுலேது தமிழ் நட்டு முஸ்லிம்கள்,மிகவும் கவனம்.இந்திய முழுதும் முசாத்(இஸ்ரேலியர்கள்)பணிகள் திவிறேமக்கயுள்ளேது...
இது அதன் ஒரு அங்கம் என்றும் நான் நினைக்கிறேன்........

Post a Comment

Flag Counter

Free counters!