December 07, 2011.... AL-IHZAN Local News
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரச தரப்புக்கும் இடையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பிரதான மூன்று விடயங்களை அரசாங்கம் ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. “01.வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தல்,
02.ஒன்றிணைக்கப்பட்ட மாகாணத்திற்கு சட்டம், ஒழுங்கு, பொலிஸ் அதிகாரம் 03.அரச காணிகளை மாகாண அரசுக்கு உரித்தாக்குதல் ஆகிய கோரிக்கைகளை ஏற்க அரசாங்கம் மறுத்து விட்டது. ஆனால் அந்த மூன்று கோரிக்கைகள் குறித்தும் நாம் அரச தரப்பிடம் விளக்கமளித்தோம். பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்று எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள் :
Post a Comment