November 05, 2011.... AL-IHZAN Local News
News: Lankamuslim
ஏ.அப்துல்லாஹ் : 2010 (2011) ஆண்டுக்கான இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் 516 பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார். தமிழ், சிங்கள மொழி மூலமாக பரீட்சையில் 15 வரையான முஸ்லிம் பரீட்சாத்திகள் சித்தியடைந்துள்ளனர்.
வகுப்பு-III ற்கு ஆட்களைத் திரட்டுவதற்கான பரீட்சையில் தமிழ், சிங்கள மொழி மூலமாக பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 516 சித்தியடைந்துள்ளனர். பரீட்சையில் சித்தியடைந்த பரீட்சாத்திகளுக்கான நேர்முகப்பரீட்சைக் கடிதங்கள் நேரடியாக அவர்களது முகவரிக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது...
தமிழ், சிங்கள மொழி மூலமாக பரீட்சையில் 15 வரையான முஸ்லிம் பரீட்சாத்திகள் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் ஆறு பேர் பெண் பரீட்சாத்திகள் என்பது குறிபிடத்தக்கது , சித்தியடைந்த முஸ்லிம் பரீட்சாத்திகளில் நான்கு பேர் ஏறாவூர் பிரேதேசத்தில் இருந்தும் ,இருவர் அட்டாலச்சேனை பிரேதேசத்தில் இருந்து தெரிவாகியுள்ளனர். ஏனையவர்கள் திக்வெல, உடத்தலவின்ன, தெஹிவல, பெந்தோட்ட, மருதமுனை, திருகோணமலை மக்கோன, நட்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இருந்து சித்தியடைந்துள்ளனர்.
பரீட்சையில் சித்தியடைந்தவர்களுடைய பெயர் விபரங்கள் பார்வையிட கீழ் கிளிக் செய்யவும்:
News: Lankamuslim
0 கருத்துரைகள் :
Post a Comment