animated gif how to

அஷ்ரப் நகர் பகுதியில் தமது காணிகளை தம்மிடம் தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்

November 09, 2011 |

November 09, 2011.... AL-IHZAN Local News

அஷ்ரப்நகர் சர்ச்சைக்குரிய தீகவாபியின் எல்லைக் கிராமமாகும். அதனால், அஷ்ரப்நகர் பகுதியில் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே வருகின்றது . இக்கிராமத்தில் 1950களில் முஸ்லிம்கள் குடியிருந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். அஷ்ரப் நகர் ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவர் ஐ.எல்.அலியாரின் தகவலின்படி ’1952 ஆம் ஆண்டுகளில் நாங்கள் இங்கு இருந்தோம். அதற்கு முன்னர் எங்கள் வாப்பா, வாப்பாவின் வாப்பா என்று இருந்திருக்கிறார்கள். இது எங்கள் பரம்பரை நிலம்’ என்று  தெரிவிக்கின்றார் இதைதான் அங்குள்ள மற்றவர்களும் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப் நகர்ப் பகுதியில் 186 குடும்பங்கள் வசிப்பதாகத் தெவிக்கப்படுகிறது.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கிராமத்திலுள்ள 31 பொதுமக்களின் 66 ஏக்கள் பரப்பரவுள்ள காணிகளின் அனுமதிப் பத்திரங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர ரத்துச் செய்திருந்தார்.

மேற்படி 31 பேரும் தமது காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களை 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து இதை செய்திருந்தார் அந்த மக்கள் அனைவரையும் குறித்த காணிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்கிற உத்தரவொன்றினையும் பிறப்பித்திருந்தார். இதை தொடர்ந்து அந்த காணிகளை கொண்டிருந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது...

இந்த நிலையில்தான் நேற்று அஷ்ரப்நகர் பகுதி மக்களின் காணிகளில் இராணுவம் அத்துமீறி முகாம்களை அமைத்துவருவதாக தெரிவித்து முஸ்லிம் குடும்பங்கள் ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் எங்கள் பூமியில் எங்களை நிம்மதியாக வாழ விடு, ஜனாதிபதியே இது உங்கள் கவனத்துக்கு, “இராணுவமே உடனடியாக எங்கள் காணிகளை விட்டு வெளியேறு’, “அரசாங்க அதிபரே எங்கள் காணியை மீட்டுத்தா’, “அன்று பொன்னன்வெளி, இன்று அஷ்ரப் நகர், நாளை?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர் என்று அறிய முடிகின்றது.
News: Lankamuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!