November 05, 2011.... AL-IHZAN Local News
சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கல்முனை வாழ் மக்களுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேடஸ்; தயாராகவுள்ளதாக கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனை பிரதி மேயராக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதற் தடவையாக இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் அமைப்பின் தலைவருமான மஹ்மூத் முஹம்மட் அல் மஹ்மூதை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கல்முனை வாழ் மக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; உதவும் என தூதுவர் உறுதியளித்ததாக நிசாம் காரியப்பர் தெரிவித்தார்...
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஏழு வருடங்களாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய அரபு எமிரேடஸ் தூதுவரிடம் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மக்களுக்கு அவசரமாக மேற்கொள்ள வேண்டிய உதவி திட்டங்கள் தொடர்பிலான முன்மொழிவொன்றையும் தூதுவர் மஹ்மூதிடம் கையளித்ததாக நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கல்முனை வாழ் மக்களை நேரில் வந்து பார்வையிடுமாறு சட்டத்தரணி நிசாம் காரியப்பர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தூதுவர் விரைவில் கல்முனைக்கு விஜயம் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கல்முனை பிரதி மேயராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ. புட்டின், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய முக்கியஸ்தர்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கல்முனை அபிவிருத்தி தொடர்பில் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
-தமிழ்மிரர்-
0 கருத்துரைகள் :
Post a Comment