animated gif how to

கூட்டுப்படுகொலை:அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக் மக்கள் வழக்கு பதிவு

November 24, 2011 |

November 24, 2011.... AL-IHZAN World News

சிவிலியன்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் நடத்திய குற்றங்களின் பெயரால் அமெரிக்க அரசு மற்றும் ராணுவத்தின் மீது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈராக் மக்கள் வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.


ஈராக் ஆக்கிரமிப்பை தொடர்ந்து 2003-ஆம் ஆண்டு முதல் நாட்டின் சாதாரண குடிமக்கள் மற்றும் அவர்களது சொத்துக்கள் மீது அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படையினர் நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை வழக்கறிஞர்களை மேற்கோள்காட்டி ப்ரஸ் டி.வி கூறுகிறது...

ஜெனீவா ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக் ஆக்கிரமிப்பை தொடர்ந்து சிவிலியன்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு போதிய இழப்பீட்டை வழங்க பொறுப்புள்ளதாக வழக்கறிஞர்கள் குழுவின் இயக்குநர் ரஸாக் அல் அபாதி தெரிவித்துள்ளார். குற்றம்புரிந்த அமெரிக்க ராணுவத்தினரை சட்டத்தின் முன்னால் நிறுத்த ஈராக் மக்களுக்கு உரிமை உண்டு என அவர் கூறினார்.


ஈராக் நீதிமன்றங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் முன்னேற்றத்திற்கு தேவையான உதவியை அரசு அளிக்கும் என ஈராக் சட்ட உதவி குழு உறுப்பினர் ஸஅத் அல் முத்தலிபி அறிவித்துள்ளார். இந்த வழக்குகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள ஈராக் பாராளுமன்றம் வழக்குகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றம் அனுமதி அளித்தால் அமெரிக்காவிற்கு எதிரான சட்ட போரில் நேரடியாக பங்கேற்க வேண்டிய நிர்பந்தம் ஈராக் அரசுக்கு ஏற்படும்.


1 கருத்துரைகள் :

Anonymous said...

மக்கள் விழிப்பு ஈராக்கிலும் மிக அணமையில் ஏற்பட வேண்டிய தேவை இறுக்கிறது

Post a Comment

Flag Counter

Free counters!