animated gif how to

புஷ்ஷும், ப்ளேயரும் யுத்தக் குற்றவாளிகள் - மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு

November 24, 2011 |

November 24, 2011.... AL-IHZAN World News

கோலாலம்பூர்: ஈராக்கை ஆக்கிரமிக்கும் வேளையில் போர் குற்றங்களை புரிந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷும், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயரும் குற்றவாளிகள் என மலேசியாவின் போர் குற்றத்திற்கான தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.

இதுக்குறித்து தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆக்கிரமிப்பிற்கு தலைமை தாங்கியதன் மூலமாக இருவரும் இனப் படுகொலையையும், மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்துள்ளனர். சட்டத்தையும், நீதியையும் பார்வையாளராக மாற்றிவிட்டு ஆக்கிரமிப்பு ராணுவம் ஈராக்கில் கூட்டுப் படுகொலையை நடத்தியுள்ளது...
பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்து தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.’ என கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பாயம் கண்டறிந்தவற்றை சர்வதேச க்ரிமினல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். போர்க் குற்றவாளிகள் பட்டியலில் ஜார்ஜ் புஷ்ஷையும், டோனி ப்ளேயரையும் உட்படுத்தவேண்டும் என நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!