animated gif how to

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆயத்தம்

November 05, 2011 |

November 05, 2011.... AL-IHZAN World News

ஈரான் நாடு மீது தாக்குதலை நடத்துவதற்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தயாராகிவருவதாக பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஈரான் 4 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் வல்லமையை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே ஈரான் மீதான இந்தத்தாக்குதலுக்கு மேற்குநாடுகள் தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுதொடர்பில் அமெரிக்கா ஜனாதிபதியும், பிரிட்டன் பிரதமரும் ஆராய்ந்துள்ளதைப் போன்றே அந்நாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் இதுதொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது...

அதேவேளை லிபியாவுக்கு நேற்று வியாழக்கிழமை சென்றிருந்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்,  சர்வதேச விவகாரங்களை கையாள்வதில் அமெரிக்கா மதிநுட்பத்தை இழந்துவிட்டதாகவும், அது தனது படைப்பலத்தில் மாத்திரமே தங்கியிருப்பதாகவும், ஈரான் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாரெனவும், ஈரான் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் நாடுகள் ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திப்பது சிறந்ததெனவும் குறிப்பிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!