November 09, 2011.... AL-IHZAN India News
துருவம்-இணையத்தளம்
இந்த வயசான காலத்துல தியேட்டருக்குப்போய் படம் பாக்கிறது தேவையா எண்டு நீங்க கேக்காதீங்க. நானும் நாலும் தெரிஞ்சிக்க வேணாமா...? விஜய் நடிச்ச வேலாயுதம் நல்ல வசூல் எண்டு என்ட கூட்டாளி சொன்னான். நானும் அத நம்பித்தான் பார்க்கப் போனேனுங்கோ..
விசில் பறக்க படம் ஆரம்பிச்சிடுச்சி. விஜய்க்கு டப்பிங் படம் எண்டா ஓ.கே. போலக் கெடக்கு. அவருக்கெண்டு எழுதுற கதை ஒண்டும் இப்ப வெல்லுது இல்ல. எல்லாம் ஊத்திக்கிச்சி. வேலாயுதம் எண்டு ஒரு கேரக்டரை கற்பனையா உருவாக்கி, பொறகு அதுவே கதையாப் போகுது. பாட்டு எல்லாம் கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சி. ஆனா, ஒண்டு பாருங்கோ, படம் முழுக்க முஸ்லிமை, குறிப்பா பாகிஸ்தான் நாட்டுக்காராக்களை எப்பவும் எதிரியாகத்தான் இந்திய சினிமா சித்தரிக்குது...
இந்திய சினிமா முளச்சி மூனு இலையே விடல...., அதுக்குள்ள எப்பவுமே பாகிஸ்தானை வம்புக்கு இழுக்கிறதுதான் வேல. அத்தோட முஸ்லிம்கள்ட "ஜிஹாத்" என்கிற புனிதப்போரை எப்பவும் கொடூரமாகத்தான் படத்துல காட்டுவாங்க. படம் எடுக்கிறவங்களுக்கு இஸ்லாமிய அறிவும் இல்ல, ஒரு மண்ணும் இல்ல. ஒருவர் முஸ்லிம் எண்ட பெயர்ல துப்பாக்கியோட வந்தா, உடனே அவன் "ஜிஹாத்" எண்டு முத்திரை குத்துறதுதான் அவங்கட வேலை. ஜிஹாத் எண்டா என்ன எண்டு முதல்ல இவங்களுக்கு பாடம் எடுக்கவேணும். சும்மா தமிழ் மக்களை கொல்லுறவன் எல்லாம் ஜிஹாத் எண்டா படம் பார்க்குற நாங்க எல்லாம் கேணயனா...?
நீங்க எண்டைக்கு பாகிஸ்தானையும், முஸ்லிம்களையும் வில்லனாக காட்டாம படம் எடுக்குறீங்களோ அண்டைக்குத்தான் உருப்படுவீங்க..!
0 கருத்துரைகள் :
Post a Comment