animated gif how to

ஆப்கானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற அமெரிக்காவிற்கு உதவ தயார்-இம்ரான்கான்

November 04, 2011 |

November 04, 2011.... AL-IHZAN World News

ஆப்கானிலிருந்து அமெரிக்க ராணுவம் பாதுகாப்பாக வெளியேற தனது கட்சி உதவும் என தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.லாகூரில் நடந்த கட்சிப்பேரணியில் உரையாற்றினார் அவர்.


அமெரிக்காவுடன் உறவை மேம்படுத்த தயார்.ஆனால், கட்டளைக்கு தலையாட்டும் நபராக மாற தன்னால் இயலாது என இம்ரான் கான் தெரிவித்தார்.இருபது ஆண்டுகளிடையே லாகூரில் நடந்த மிகப்பிரம்மாண்டமான பேரணிகளில் மிக அதிகமான மக்கள் இம்ரான் கானின் உரையை கேட்க திரண்டிருந்தனர்...

பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் போராளி தாக்குதல்களை முடிவுக்குகொண்டுவரவ பாகிஸ்தான் ராணுவம் பழங்குடியினர் பகுதியிலிருந்தும், அமெரிக்க ராணுவம் ஆப்கானிலிருந்தும் வெளியேறவேண்டும் என கூறிய இம்ரான் கான் பாகிஸ்தான் அரசு சொத்து விபரத்தை வெளியிடவில்லையெனில் நாடு முழுவதும் சட்டமீறல்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்குவேன் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!