November 03, 2011.... AL-IHZAN Local News
-எம்.சி.அன்சார்-
-எம்.சி.அன்சார்-
கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று புதன்கிழமை மாலை மாநகர பிரதேசத்திலுள்ள பாண்டிருப்பு, பெரியநீலாவணை, கல்முனை, மணல்சேனை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய தமிழ் கிராமங்களிற்கு நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அப்பிரசேங்களில் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளையும் பார்வையிட்டார்.
குறிப்பாக பாண்டிருப்பில் எல்லை வீதி, கடந்த முறை ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த கடற்கரை வீதி, பொது நூலகம், சேனைக்குடியிருப்பு முருகன் கோயில் வீதி, வனவாச குறுக்கு வீதி, கல்முனை உடையார் வீதி, நற்பிட்டிமுனை பிள்ளையார் கோயில்முன் வீதி, மணல்சேனை வில்லியம் வீதி, பெரியநீலாவணை சரஸ்வதி மகா வித்தியாலய வீதி என்பவற்றை பார்வையிட்டதுடன் அவ்வீதிகளில் தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்றுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்தார்...
இதேவேளை சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத் திட்டத்திலுள்ள மக்களின் குடிநீர்ப் உள்ளிட்ட பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இவ்விஜயத்தின் போது மாநகர சபையின் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், வீ.கமலதாஸன், ஏ.விஜயரெட்னம், எஸ்.ஜெயக்குமார், ஆணையாளர் ஜே.லியாக்கத்தலி, பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, பிரத்தியேகச் செயலாளர் ஏ.எல்.எம்.இன்ஸாட், பொதுச் செயலாளர் ஏ.பீர்முஹம்மட் ஆகியோர்களும் முதல்வருடன் சென்றிருந்தனர்.
News: தமிழ்மிரர்
0 கருத்துரைகள் :
Post a Comment