animated gif how to

பலஸ்தீனை துண்டாக பிரிப்பதற்கு ஈரான் கடுமையாக எதிர்ப்பு

October 03, 2011 |

October 03, 2011.... AL-IHZAN World News

பலஸ்தீனை துண்டாக பிரிக்கும் ஐ.நா. தனிநாட்டு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.


ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா அலி கமைனி பலஸ்தீனத்தின் அங்கத்துவ கோரிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அதில் சுதந்திரமான முழு பலஸ்தீனமே எமது கோரிக்கை. பலஸ்தீனத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல. இவ்வாறு துண்டாக பிரிக்கும் எந்த கோரிக்கையும் முற்றாக நிராகரிக்கப்படும் என்றார்.


ஐ.நா. அங்கத்துவம் பெற பலஸ்தீன ஜனாதிபதி விண்ணப்பித்துள்ளார். இதில் அவர் மேற்குக்கரை, கிழக்கு ஜரூஸலம் மற்றும் காசா பகுதிகளே பலஸ்தீனமாக கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!