October 03, 2011.... AL-IHZAN Local News
இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் இறுதியான ஹஜ் காலத்தில் குர்பான் கடமையை நிறைவேற்றல் தொடர்பில் அசசம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முஸ்லிம்களின் முதன்மை மிக்க தேசிய இளைஞர் இயக்கமாகிய அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய பொது செயலாளர் பைஸல் ஜிப்ரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் பன்னெடுங்காலம் தொட்டு முஸ்லிம்கள் ஏனைய இனங்களோடு ஐக்கியமாகவும்இ சமாதானமாகவும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், முஸ்லிம் சமூகம் இந்நாட்டின் சுதந்திரத்துக்கும்இ அபிவிருத்திக்கும் பல வழிகளில் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளது...
முஸ்லிம் சமூகம் தனது சமயக் கடமைகளை எவ்விதமான இடையூறுகள், தடைகள் இல்லாமல் சுதந்திரமாக நிறைவேற்றுவதற்கு அவ்வப்போது நாட்டை ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள், அரசாங்கங்களிடமிருந்து பூரண பாதுகாப்பையும், அனுசரனையையும் பெற்று வருகின்றது.
இருந்தபோதிலும், சமீப காலமாக முஸ்லிம்களின் சமய கடமைகளை நிறைவேற்றும் விடயத்தில் இடம்பெற்று வருகின்ற சில தடைகள், இடையூறுகள் குறித்து அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை மிகுந்த கவலையடைகின்றது.
குறிப்பாக இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை நிறைவேற்றும் காலத்தில் முஸ்லிம்களின் சமய கடமையாகிய குர்பானை நிறைவேற்றுவதில் பல தடைகளையும்இ அச்சுறுத்தல்களையும் அலைக்கழிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
அக்கடமையை சுதந்திரமாக நிறைவேற்றுவதற்கு மக்கள் சேவையில் உள்ள சிலர் எதிர்காலத்தில் தடைகளை விதிக்கலாம் எனவும் ஐயுறுகின்றது. உலகளாவிய முஸ்லிம் உம்மாவுடன் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களும் ஏனைய சமயங்களை பின்பற்றும் மக்களின் சமய உணர்வுகளைப் புண்படுத்தாத விதத்தில் மிகுந்த ஒழுக்கத்துடன் குர்பான் கடமையை கடந்த காலங்களில் நிறைவேற்றி வந்துள்ளார்கள்.
எனினும், அண்மை காலத்தில் வெளியிடப்பட்டுள்ள சிலரின் அறிக்கைகள் முஸ்லிம்கள் ஹஜ் காலத்தில் நிறைவேற்றுகின்ற குர்பானி போன்ற கடமைகளை இம்முறை நிறைவேற்றுவதை மிகவும் பாதிப்படைய செய்யலாமென கருதுகின்றனர்.
இது முஸ்லிம்கள் மத்தியில் விரும்பத்தகாத பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்நாட்டில் தற்போது நிலவுகின்ற சமாதான அமைதி வாழ்வுக்கும் குந்தகம் விளைந்திடுமோ என்ற அச்சம் மேலிட்டுள்ளது..
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்புஇ இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் தனது சமயக் கடமைகளை எவ்வித இடையூறுகளுமின்றி நிறைவேற்றுவதற்குரிய உத்தரவாதத்தை வழங்கியிருப்பதை இவ்விடத்தில் நாம் வலியறுத்த விரும்புகின்றோம்.
எனவே, எதிர்வரும் ஹஜ் காலத்திலும், இதற்கு பின்னரும் குர்பான் உட்பட ஹஜ் தொடர்பான கடமைகளை சுதந்திரமாக முஸ்லிம்கள் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தவும் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கும் இது விடயத்தில் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவன செய்ய வேண்டும் என அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை இந்நாட்டு முஸ்லிம்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றது.
-தகவல் தமிழ் மிரர்-
0 கருத்துரைகள் :
Post a Comment