animated gif how to

துனீசியா:அந்நஹ்ழா இஸ்லாமிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஹமீத் ஜபலி

October 27, 2011 |

October 27, 2011.... AL-IHZAN World News

துனீசியாவில் முதன் முறையாக சுதந்திரமாக நடந்த தேர்தலில் மிகச்சிறந்த வெற்றியை ஈட்டியுள்ள அந்நஹ்ழா கட்சியின் பொதுச்செயலாளர் ஹமீத் ஜபலி பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை ஊடகங்களுக்கு தெரிவித்த கட்சியின் செய்தித்தொடர்பு அலுவலக உறுப்பினர் ஸய்த் ஃபிர்ஜானி இக்காரியத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.


அதிபர் பதவியை கட்சி கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலி வெளியேற்றப்பட்ட பிறகு உருவான இடைக்கால அரசின் பிரதமர் பெஜி ஸய்த் ஸெப்ஸி அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுவார் என கருதப்படுகிறது...



கான்ஸ்ட்டிடுவண்ட் அஸெம்பிளிதான் பிரதமரையும், அதிபரையும் தேர்வுச்செய்யும்.பிரதமர் பதவிக்கு மட்டுமே அந்நஹ்ழா போட்டியிடுகிறது. 217 உறுப்பினர்களைக்கொண்ட பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முடிவு அறிவிக்கப்பட்ட 87 இடங்களில் 37 இடங்களை அந்நஹ்ழா கைப்பற்றியுள்ளது.


காங்கிரஸ் பார்டி ஃபார் ரிபப்ளிக் 14 இடங்களையும், இத்திஹாத்துல் 10 இடங்களையும், ப்ரொக்ரெஸிவ் டெமோக்ரேடிக் பார்டி ஐந்து இடங்களையும் இதர இடங்களை 4 கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!