animated gif how to

உழ்ஹியா தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா!

October 27, 2011 |

October 27, 2011.... AL-IHZAN Local News

ஹஜ் பெருநாள் தினங்களில் மாடுகளை அறுத்துப் பலியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனை உரிய முறையில் நிறைவேற்றுங்கள். ஆனால் கன்றுக் குட்டிகள், பசுக்கள், எருமைகள் போன்றவற்றை அறுக்க வேண்டாம். இத்தினங்களில் குர்பான் செய்யப்படும் மாடுகளை வதை செய்யாமல் அறுத்து, முஸ்லிம்கள் தம்முடைய மார்கக் கடமையை மேற்கொள்ளலாம் என மக்கள் தொடர்பாடல், மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளாராம்


நேற்று மல்வானையில் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் குர்பான் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றின்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார் நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்பதற்காக அதனை தடுத்து நிறுத்த முடியாது. அதனை உண்பவர்கள் இருக்கின்றனர். மக்கள் தொடர்பு அமைச்சர் என்ற வகையில் மக்கள் உணர்வுகளுக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்...

இன்று வத்தளை போன்ற பகுதிகளில் மாடுகள் தகாத முறையில் வதை செய்யப்பட்டு கொல்லப்படுகின்றன. இவற்றை நான் நிறுத்தினேன். அந்த மாடுகளை விடுவித்தேன்.


எனவே மாடுகளை அறுக்காமல் ஆடுகள் அறுக்க முயற்சிக்குமாறு நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். தேவை ஏற்படுமானால் ஒட்டகங்களைக்கூட இறக்குமதி செய்யத் தயாராக இருக்கிறேன். என்றாலும் எல்லோராலும் விலைகொடுத்து ஆட்டிறைச்சி உண்ண முடியாது. எனவே எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினங்களில் உங்களது கடமையை தாராளமாக நிறைவேற்றலாம். இதனைத் தடுக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.


எச்சந்தர்ப்பத்திலும் மாடுகள் வதை செய்யப்படாது உரிய முறையில் அறுக்கப்படவேண்டும். இல்லாத பட்சத்தில் அதை தடுத்து நிறுத்த நான் தயங்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளாராம் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!