October 25, 2011.... AL-IHZAN World News
கொல்லப்பட்ட லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் உடல் பாலைவனத்தில் ரகசிய இடத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை அடக்கம் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது. கத்தாஃபி மற்றும் அவரது மகன் முஃதஸிமின் உடல்கள் மிஸ்ருத்தாவிலிருந்து கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன.நான்கு தினங்களாக கத்தாஃபியின் உடல் மிஸ்ருத்தாவில் ஒரு இறைச்சிக்கடையின் ஃப்ரீஸரில் பாதுகாக்கப்பட்டு வந்தது.ஆனால் திங்கள் கிழமை நள்ளிரவில் மிஸ்ருத்தாவிலிருந்து உடல் மாற்றப்பட்டது.
பிறந்த நகரமான ஸிர்த்தேவில் அடக்கம் செய்யவேண்டும் என கத்தாஃபி மரண உயிலில் கூறியிருந்தார்.ஆனால், அவ்வாறு அடக்கம் செய்யவில்லை எனவும், ஸிர்த்தேவில் அடக்கம் செய்தால் அவரது ஆதரவாளர்களுக்கு அடக்கஸ்தலம் எதிர்காலத்தில் நினைவுச்சின்னமாக மாறிவிடும் எனவும் என்.டி.சி கூறியிருந்தது....
கத்தாஃபியின் உடலை அடக்கம் செய்வது குறித்து இடைக்கால அரசில் இடம்பெற்றவர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மிஸ்ருத்தாவில் அடக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோதிலும் என்.டி.சி உறுப்பினர்கள் அதனை எதிர்த்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை கத்தாஃபியை என்.டி.சி படையினர் கொலைச்செய்தனர். தாக்குதல் கடுமையாக நடக்கும்வேளையில் தப்பமுயன்ற கத்தாஃபியின் வாகனத்தின் மீது நேட்டோ ராணுவம் நடத்திய தாக்குதலில் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து பிடிப்பட்ட கத்தாஃபியை என்.டி.சி படையினர் சுட்டுக்கொன்றனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment