October 25,2011.... AL-IHZAN Local News
சவூதி அரேபியாவிலுள்ள உள்ளூராட்சி மன்றமொன்றுடன் காத்தான்குடி நகர சபையை இணைத்து அப்பகுதியை முழுமையாக நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களிடம் சவூதி அரேபிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர், சவூதி அரேபிய மாநகர மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சருமான மன்சூர் பின் முதீப் பின் அப்துல் அஸீஸ் அவர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த இணக்கபாட்டின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்களை ஆராய்வதற்காக அதிகாரிகள் குழு ஒன்று விரைவில் சவூதி அரேபியா செல்லவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்...
இதேவேளை, சவூதி அரேபியா சமூக விவகார மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கலாநிதி யூசுப் பின் அஹமட் அல் ஒதாமி அவர்களுடன் நடத்திய பேச்சின்போது யுதத்ததால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களின் வாழ்வதாரத்திற்கு உதவுவதற்கு அவர் இணக்கம் தெரிவித்ததாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் சவூதி அரேபிய அமைச்சர்களுடனான சந்திப்பில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் அவர்களும் கலந்துகொண் டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :
Post a Comment