October 23, 2011.... AL-IHZAN World News
முஜ்தமா
வெற்றியைப் பூரணமாக அடைந்து கொள்ளும் வரை லிபிய மக்களின் புரட்சி தொடர்ந்து கொண்டிருக்கும். கடாபி அணியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்துப் பிரதேசங்களும் விடுவிக்கப்படும் வரை இப்புரட்சி ஓய்ந்து விடாது. நபி (ஸல்) அவர்களும் அவருடைய தோழர்களும் தமது தாயகமான மக்காவிலிருந்து விரட்டப்பட்டு சுமார் 8 வருடங்களின் பின்னர் மீண்டு வந்து தமது தாயகத்தை வெற்றி கொண்டனர். வெற்றி கொண்ட நபி (ஸல்) அவர் களும் அவருடைய தோழர்களும் மக்காவினுள் நுழைந்து, வெற்றி விழாவைக் கொண்டாடினர். இதே போன்றுதான் லிபிய மக்கள் தமது தலைநகரமான திரிப்போலியைக் கைப்பற்றியவுடன் வெற்றி விழா வைத் தற்போது கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்...
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. "எங்கள் இறைவனே! அனைத்து ஆட்சிகளினதும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியைப் பிடுங்குகின்றாய். நீ விரும்புவோரை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்புவோரை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமிருக்கின்றன. நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்" (ஆல இம்றான்: 26)
லிபியாவில் பொதுமக்களை வீடு வீடாக விரட்டியடித்து வெளியேற்றிக் கொண்டும் அச்சுறுத்திக் கொண்டும் இருக்கின்ற அத்துமீறலுக்கெதிராக வானலை ஊடகங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அநியாயத்தி னதும் அடக்குமுறையினதும் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
குறிப்பிட்டதொரு காலமே அநியாயம் நிலைத்து நிற்கும். பின்னர் இறை வனின் கட்டளை வந்துவிட்டால் உடனே அது முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விடும். வரலாற்றில் பிர் அவ்னுடைய நிலையும் இவ்வாறே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
"பூமியில் அவன் பலவீனப்படுத் தியவர்கள் மீது நாம் அருள்புரிந்து பின் னர் அவர்களைத் தலைவர்களாக்கி அங்கு அனந்தரக்காரர்களாகவும் மாற்றி விட்டோம்" (கஸஸ்: 05) இதுவே மாபெரும் நற்செய்சி! இந்த மாபெரும் நற்செய்தியும் வெற்றி யும் அண்மித்துக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ் அடக்குமுறையாளர் களுக்கு எதிராக பலவீனப்பட்ட முஃமின்களுக்கு வெற்றியைத் தருவ தாக வாக்களித்திருந்தான். அதனை உண்மைப்படுத்தி வெற்றியடையச் செய்து விட்டான்.
"உங்களில் எவரேனும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்து வந்தால், அவர்களுக்கு முன்சென்றவர்களை பூமியின் அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நாம் அதிபதிகளாக மாற்றுவதாவும் அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதிப்படுத்துவதாகவும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றிவிடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்." (நூர்: 55)
இஸ்லாமிய கிரியைகளுக்கெதிரான குற்றச்சாட்டுக்கள்
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போராடிய விரோதிக்கு எதிராக அல்லாஹ் வெற்றியை வழங்கிவிட்டான். அல்லாஹ்வின் விரோதியான கடாபி இஸ்லாத்தையும் அதன் சட்டங்களையும் அதன் ஏவல் விலக்கல்களையும் குறை காண்கிறான்.
"நான் உங்களுக்கு சத்தத்தை உயர்த்தி தொழுவிக்கமாட்டேன். ஏனெனில் வைத்தியர் எனது குரலோசையை உயர்த்த வேண்டாம் என உபதேசித்திருக்கின்றார். நான் மஃரிப், இஷா ஆகிய இரு தொழுகைகளையும் சத்தத்தை உயர்த்தி தொழுவிக்காமல் இருந்ததை உங்களில் சிலர் கண்டிருப்பீர்கள். இதன் பின்னர் உங்களிடம் பகிரங்கமாக சத்தமிட்டுப் பேசு வது போன்று, மஃரிப், இஷா ஆகிய இரு தொழுகைகளை சத்தத்தை உயர்த்தி தொழுவிக்கமாட்டேன்" என்று சத்தமாக ஓதித் தொழுவதைக் குறையாகக் கண்டு தடுத்துக் கொண்டான்.
"றமழானில் ஒவ்வொரு நாளும் நோன்பு நோற்பது கைசேதமாகும். சந்தேகமேயின்றி அது ஒரு நோவினையாகும். நோன்பு அமைதியை ஏற்படுத் தும் என்று யார் கூறியது? நோன்பு ஒரு தேவையற்ற விடயமாகும். அது நிர்ப் பந்திக்கப்பட்ட கஷ்டத்துக்குட்படுத்துகின்ற செயற்பாடாகும்" என்று நோன் பைக் குறை கூறுகின்றான்.
"கஃபாவைச் சுற்றி கண்மூடித்தனமாக பின்பற்றப்படுகின்ற கிரியைகள், ஸபா மர்வாவைச் சுற்றி மேற்கொள்ளப்படும் கிரியைகள், அறபாவில் தரித்து மேற்கொள்ளும் வணக்கங்கள் அனைத்தும் தற்போது பெறுமான மற்றவையாகும். இவற்றால் அல்லாஹ் எதனையும் எதிர்பார்க்கவில்லை" என ஹஜ், உம்றா கடமைகளை விமர்சிக்கின்றான். "இதுவரை அழியாது தொடர்ந்திருக்கும் ஒரு விக்கிரகமே கஃபாவா கும்" என கஃபாவைத் தூற்றுகின்றான்.
"ஜம்றாக்களில் ஏன் கல்லெறிகின்றீர்கள். இஸ்ரேலிய ஸியோனிஸ்டுகளுக்கு எதிராக பலஸ்தீனில் கல்லெறிவதே கடமையாகும். நாம் ஒவ்வொருவரும் ஏழு கற்களை சுமந்து கொண்டு பலஸ்தீனுக்குச் செல்ல வேண்டும். இதுவே ஜிஹாதாகும். ஏழு ஜம்றாக்களில் கல்லெறிவதால் எதனை அடை ந்து கொள்ளப் போகின்றீர்கள்?" என ஹஜ்ஜின்போது மேற்கொள்ளப்படும் ஜம்றாக்களில் கல்லெறியும் வணக்கத் தைச் சாடுகின்றான்.
மிஃறாஜ் நிகழ்வைப் பொய்ப்பித்தல்
"அல்குர்ஆனில் எந்தவொரு இடத் திலும் மிஃராஜ் என்ற சொல் முற்றாகப் பயன்படுத்தப்படவில்லை. இஸ்ரா தொடர்பாக அல்குர்ஆன் கூறுகின்ற இடத்திலும் குறிப்பாக இந்த சொல் பயன்படுத்தப்படவில்லை. மிஃராஜை நம்புவதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. மிஃராஜ் என்ற நிகழ்வு உண்மையில் நடந்திருந்தால் அல்லது மிஃராஜ் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருந்தால் நிச்சயமாக அதனை அல்குர்ஆன் குறிப்பிட்டிருக்கும்.
இஸ்லாமிய அறிஞர்களின் வாய்களில் புரள்கின்ற ஒரு கற்பனைக் கதையே இந்த மிஃராஜ் நிகழ்வாகும். இது தொடர்பாக அல்குர்ஆனில் எந்தவொரும் அடிப்படையும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக புறாக் என்ற வாகனத்தில் சென்றதாக கூறப்படும் கதை ஒரு மூடநம்பிக்கையாகும். இதற்கும் எந்தவொரு ஆதாரமும் இல்லை. எனவே, இஸ்ரா மிஃராஜ் தொடர்பாக கூறப்படும் இரண்டு நிகழ்வுகளில் மிஃராஜ் என்ற கட்டுக் கதையை நாம் நிராகரித்து விடுவோம்" என கடாபி மிஃராஜை மறுத்துரைக்கின்றான்.
ஹிஜாப் அணிவது கடமையல்ல
"ஹவ்வா (அலை) அவர்களுக்கு ஆரம்பத்தில் ஆடை என்ற ஒன்று இருக்கவில்லை. இதிலிருந்து எமது இறைவனிடம் கிடைக்கப்பெற்ற நலவை நன்கு விளங்கிக் கொள்ளலாம். எமது இறைவன் ஆரம்பத்தில் எம்மை ஆடை யற்றவர்களாகவே படைத்தான். இதுதான் இயற்கையாகும். தூத் என்ற மரத்தின் இலையை சாப்பிடுமாறு ஷைத்தான் தூண்டி யிருக்காவிட்டால் நாம் ஆடையணியும் செயலை செய்திருக்க மாட்டோம். நாம் ஆடைகளை அணிந்து கொள்வதற்கான காரணகர்த்தாவாக ஷைத்தானே செயற்பட்டான். இதற்கு முன் ஆடையற்ற தாக இருப்பதே இயற்கையாக இருந்தது.
எனவே, ஹிஜாப் அணிவதும் ஷைத்தானுடைய செயற்பாடாகும். தூத் என்ற மர இலையின் மாற்றீடாகவே இந்த ஹிஜாப் கருதப்படுகின்றது. எனவே, இது ஷைத்தானுடைய செயற்பட்டால் வந்த விளைவாகும். இதன் மூலம் நாம் முன்னேறிச் செல்வதை ஷைத்தான் தடுத்துவிட்டான். குறிப்பாக இதனால் பெண்கள் ஹிஜாப் அணிந்து வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. எனவே, ஹிஜாப் அணி வது ஹராமாகும். ஹிஜாப் என்பது வெற்றுக் கருத்தாகும்."
பலதார திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லையென்றும் இருவரை அல்லது நால்வரைத் திருமணம் முடிக்கலாம் என்ற அனுமதி அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் காணப்படவில்லை என்றும் கூறுகின்றான்.
நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கும் குறிப்பாக நேர்வழி பெற்ற நான்கு கலீபாக்களுக்கும் பின்வருமாறு ஏசுகின்றான். "நபி (ஸல்) அவர்கள், பின்வந்த நான்கு கலீபாக்களை விட்டும் நீங்கிவிடுகின்றார். அலி (றழி) அவர்கள் நபியவர்களின் பிரதிநிதியான கலீபாகவாக இருந்தால், மக்களில் ஏன் அரைப் பகுதியினர் அவரோடு போராட வேண்டும்? அவருக்குப் பின்னர் வந்த அவருடைய பிள்ளைகளை மக்கள் ஏன் கொலை செய்ய வேண்டும்?
உஸ்மான் (றழி) அவர்கள் ஆட்சிக்குப் பொருத்தமற்றவர். ஏனெனில் அவர் ஒரு உயர்குடி பரம்பரையைச் சேர்ந்தவர். எனவே, அவர் அறபு இஸ்லாமிய நாடுகளில் தன்னுடைய நெருங்கிய உறவினர்களை அரச பதவிகளுக்கும் முக்கியமான பதவிகளுக்கும் நியமித்து பாரபட்சமாக நடந்து கொண்டார். எனவே, மக்கள் அவரைக் கொலை செய்து விட்டனர்."
இவ்வாறான அதிகமான நியாயங்களினால்தான் கடாபிக்கு அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட காலம் அவகாசம் அளித்து விட்டு அவனை அளிக்க நாடியிருக்கின்றான்.
தற்போது லிபியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கின்ற வீரர்கள் இவ்வாறான வெற்றி கிட்டியவுடன், மக்கா வெற்றியின் படிப்பினைகளைக் கருத்திற் கொண்டு அதே முறையில் நடந்து கொள்ள வேண்டும். மக்கா வெற்றி கிடைத்தவுடன் மக்காவிலிருந்த எதிரிகளோடு நபி (ஸல்) அவர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கடைப்பிடித்தார்கள் என்பதை கிளர்ச்சியில் ஈடுபட்ட வெற்றியாளர்கள் கவனத்திற் கொண்டு முன் மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டவுடன் அங்கிருந்த மக்களைப் பார்த்து "நான் உங்களோடு எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றேன் என நினைக்கின்றீர்கள்" என வினவினார்கள். அதற்கு அவர்கள் அனைவரும் "நீங்கள் எங்களின் கண் ணியமிக்க சகோதரர். எங்களின் கண்ணியமிக்க சகோதரரின் மகன்" என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர் கள் அனைவரையும் பார்த்து "நீங்கள் அனைவரும் சுதந்திரவான்கள். சுதந் திரமாகவே இங்கே இருங்கள்" எனக் கூறி அனைவரையும் மன்னித்து அன்புடன் நடந்து கொண்டார்கள்.
லிபியாவில் இரத்த வெறி பிடித்த, கொடூரமான, மிருகத்தனமான மற்றும் விவரிக்க முடியாத அளவு கடுமையான ஒரு ஆட்சியே இதுவரை கடைப் பிடிக்கப்பட்டது. இந்த ஆட்சியில் அடைக்குமுறைக்குட்பட்ட சகோதரர் களாவே மக்கள் அனைவரும் இருந்த னர். ஆனால், இரத்த வெறி பிடித்த துரோகிகள் இவ்வாறு இருக்கவில்லை. இந்த துரோகிகளின் கைகளில் அனைத்துக் கருவிகளும் காணப் பட்டன. அங்கு காணப்பட்ட ஒழுங்கை மீறும் சந்தர்ப்பங்களில், அனைத்து மக்களும் தமது வாழ்க்கையிலும் தமது சந்ததிகளின் வாழ்க்கையிலும் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டுக் கொண்டிருந்தனர்.
எனவேதான், அங்கு கடைப்பிடிக்கப்பட்ட ஆட்சியைத் தகர்த்தெறிந்து அல்லாஹ்வை ஈமான் கொண்ட, அவனோடு பலமான பிணைப்பைக் கொண்ட நாடாக தமது நாட்டை மாற்ற வேண்டும் என்பதற்காகவும் இதுவரையிருந்த ஒழுங்கை கடைப்பிடிக்காது அமைதியையும் பல வருடங்களாக தேடிக் கொண்டிருக்கின்ற பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே அங்கிருந்த மக்கள் புரட்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குட்பட்டு உழைத்தனர். சுமாராக நான்கு தசாப்தங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடாபியின் மிருகத்தனமான ஆட்சியை தகர்த்தெறிந்து கண்ணிய மிக்க நாடாக லிபியா மாற வேண்டும் என்பதற்காகவும் இவர்கள் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.
எனவே இந்த நேரத்தில் அனைவரும் இவ்வாறான கொடூரமான ஒழுங்கிலிருந்தும் பழிவாங்கப்படும் நிலையிலிருந்தும் பாதுகாப்பு பெற்று விட்டனர் என்பதையும் நாற்பது வருடங்களுக்கு மேலாக அனுபவித்து வந்த சோதனைகளிலிருந்து பாதுகாப் புப் பெற்று, இதன்பின்னர் வருகின்ற ஒவ்வொரு இரவையும் அமைதியாகக் கழிக்க முடியும் என்பதையும் தம்முடைய மனக்கண்முன் கொண்டு வரவேண்டும்.
அதேபோன்று புரட்சியின் மூலம் வெற்றி கொண்ட மக்கள் லிபியாவின் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற தமது சகோதரர்களுக்கு அநீதத்திலி ருந்து பாதுகாப்பும் வெற்றியும் கிடை த்து விட்டது என்பதை அறிவிக்க வேண்டும். இதன் பின்னர் எவரும் தாம் ஏற்கனவே கடைப்பிடித்து வந்த ஒழுங்கை மீறியதன் காரணமாக தண்டனைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்ற செய்தியையும் எத்தி வைக்க வேண்டும்.
இறுதியாக லிபிய மக்கள் அனை வரும் தமது நபியின் வழிமுறையைப் பின்பற்றி நடக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். ஆநியாயக்காரர்களை அழித்து விட்ட, அழிக்கக் கூடிய வல்ல அல்லாஹ்வைப் புகழ்வோம். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! "அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களின் வேர் அறுபட்டு விட்டது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே அகிலத்தாரின் இரட்சகன்" (அன்ஆம்: 45)

1 கருத்துரைகள் :

Post a Comment