animated gif how to

ஒபாமாவின் சம்பளத்தில் பாதிக்கும் மேல் வாங்கும் சராசரி குவைத்தியர்கள்

October 19, 2011 |

October 19, 2011.... AL-IHZAN World News

உலகின் எந்நாட்டவரை விடவும் அதிக அளவு சம்பாதிப்பவர்கள் குவைத்தியர்கள் என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுத் துறையில் வேலை செய்யும் குவைத்தியர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 1,598 குவைத் தீனார் சம்பளம் பெறுகிறார்.


குவைத் பெட்ரோலியம் கார்பரேஷன் உள்ளிட்ட பொது துறை நிறுவனங்களில் வேலை செய்யும் குவைத்தியர்கள் கொடுக்கப்படும் அலவன்ஸ்கள் மற்றும் பிற படிகளை கணக்கில் கொண்டால் மாதம் ஒன்றுக்கு சுமார் 4,800 குவைத் தினார் சம்பளம் கிடைக்கிறது.
எனவே ஒரு சராசரி குவைத்தியர் ஆண்டொன்றுக்கு சுமார் 2,10,000 டாலர்கள் சம்பாதிக்கிறார். இது ஒபாமாவின் அரையாண்டு சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் ஆண்டு சம்பளம் 4,00,000 டாலர்கள் ஆகும். அதே சமயத்தில் பொது துறை நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு மூன்றில் ஒரு பகுதி சம்பளம் மட்டுமே கொடுக்கப்படுகிறது அவர்கள் அதே தகுதி மற்றும் படிப்பு போன்றவை பெற்றிருந்தாலும் என்பது யதார்த்தம்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!