animated gif how to

'வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு' பாராளுமன்றத்தில் கவனயீர்ப்பு பிரேரணை

October 18, 2011 |


October 18, 2011.... AL-IHZAN Local News

பாராளுமன்றத்தில் கருப்பு ஒக்டோபர் (வடக்கு முஸ்லிம்கள் புலிகளின் இனச்சுத்திகரிப்பு உட்பட்ட மாதம்) தொடர்பாக கவனயீர்ப்பு பிரேரனை ஒன்றை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கான ஏற்பாடுகளை வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் மேற்கொண்டு வருகின்றார். இதற்கான வேண்டுகோளை   லங்கா முஸ்லிம் இணையத்தள குழுமம் முன்வைத்திருந்து. 
  
இந்த வேண்டுகோளை கவனத்தில்கொண்ட பிரதியமைச்சர் அந்த கவனயீர்ப்பு பிரேரனை இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத ஆரம்ப வாரத்தில் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். இந்த கவனயீர்ப்பு பிரேரனை மீது அவர் உரையாற்றவுள்ளார் ”சிகப்பு ஆகஸ்து”, ”கருப்பு ஒக்டோபர்” என்ற நூலிலும் அது தொடர்பான விபரங்கள் பதிவு செய்யப்படும்...

விடுதலை புலிகளின் பலவந்தமாக வெளியேற்றம் என்பதில் மறைந்து கிடக்கும் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மிக பாரிய கொள்ளை சம்பவம் அதற்குரிய சரியான கவனத்தை பெற்றுக்கொள்ளவில்லை. விடுதலை புலிகள் மேற்கொண்ட பலவந்த வெளியேற்றம் இலங்கை வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக பாரிய கொள்ளை சம்பவத்தையும் உள்ளடக்கியுள்ளது என்பதையும் அதற்கு எந்தவிதமான நஷ்டஈடுகளும் முறையாக வழங்கப்படவில்லை என்பதையும் , தற்போது மீள் குடியேறும் விருப்பத்துடன் மீள்குடியேறச் சென்றுள்ள மக்களுக்கு எந்தவிதமான அடிப்படையான உதவிகளும் அரசினாலோ அல்லது வேறு அரச சார்பற்ற நிறுவங்களின் மூலமோ வழங்கப் படவில்லை என்பதையும் இதன் காரணமாக அவர்கள் கடந்த 21 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பிரதேசங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் பாராளுமன்றத்தில் ஒரு கருப்பு ஒக்டோபர் கவனயீர்ப்பு பிரேரனை மூலம் உணர்தப்படவுள்ளது.


கருப்பு ஒக்டோபர் இலங்கை வரலாற்றில் இருண்ட கருப்பு பக்கங்களை கொண்டுள்ள மாதமாகும். ஒக்டோபர் 1990 ஆம் ஆண்டில்தான் வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப் பட்டார்கள். இந்த பலவந்த வெளியேற்றம் வரலாற்றில் பதிவுகளை பெற்றுள்ளபோதும். பெரும்பாலும் அது ஒரு பலவந்த வெளியேற்றமாக மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது.


இந்த பலவந்த வெளியேற்றத்தின் போது முஸ்லிம்களின் அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் கொள்ளையிடப்பட்டது. அந்த கொள்ளைச் சம்பவம் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிக பாரிய கொள்ளைச் சம்பவமாக நிகழ்ந்த போதும் அது வரலாற்றில் போதுமான அளவு உள்வாங்கப் படவில்லை. அல்லது அதற்குரிய சரியான இடம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இந்த பலவந்த வெளியேற்றம் வடக்கு முஸ்லிம்களுக்கு ஒக்டோபரின் நிகழ்தாலும் அதற்கு முன்னரும் பின்னரும் கிழக்கு முஸ்லிம்கள் இதற்கு தொடர்ந்தும் முகம்கொடுத்தே வந்தார்கள் . கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதூர் முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை இதற்கு ஒரு சான்றாகும். அதேபோன்று கிழக்கின் பல பிரதேசங்களிலும் இருந்த முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப் பட்டார்கள். மட்டகளப்பு மாவட்டத்தில் சில கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்கள் 25 ஆண்டுகளின் பின்னர் கடந்த ஆண்டு மீள்குடியேற முயற்சிகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .


இந்த விடயங்களை மையமாக வைத்து பாராளுமன்றத்தில் கொண்டுவரப்போகும் கவனயீர்ப்பு பிரேரனை மூலம் வரலாற்றின் பக்கங்களில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பயங்கரத்தை வலுவாக பதித்து கொள்வதே இதன் பிரதான நோக்கமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!