animated gif how to

பாக்.எல்லையில் போருக்கு தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்

October 18, 2011 |

October 18, 2011.... AL-IHZAN World News

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாக்.பழங்குடியின பகுதியான வடக்கு வஸீரிஸ்தானுக்கு அருகே போருக்கு தயாராக நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


இப்பகுதியில் நவீன போர்க் கருவிகளுடன் நடமாடுவதாகவும், கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்தி போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூஸ் இண்டர்நேசனல் செய்தி வெளியிட்டுள்ளது.


வடக்கு வஸீரிஸ்தானில் குலாம்கான் மாகாணத்திற்கு மேலே அமெரிக்க ராணுவ விமானங்கள் ரோந்து சுற்றிவருவதை கண்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் நடவடிக்கையை கவனமாக கண்காணித்து வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திக்கு அமெரிக்க அதிகாரிகள் பதிலளிக்கவில்லை...
இதற்கிடையே வஸீரிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்திவரும் அமெரிக்கா பாகிஸ்தானின் பொறுமையை இழக்கச் செய்ததாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஹ்மத் முக்தார் தெரிவிக்கிறார். தாக்குதல் எல்லையை கடந்தால் பதிலடி கொடுக்க வேண்டிவரும் எனவும், அதற்கான வாய்ப்பை உருவாக்காமல் இருப்பதுதான் நல்லது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஒருதலைபட்சமான அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு புதிய சட்டம் கொண்டுவரும் எனவும் அவர் கூறினார்.


பாகிஸ்தானில் அமெரிக்காவின் அடாவடி ஆளில்லா விமானத் தாக்குதலில் 775 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!