October 14, 2011.... AL-IHZAN Local News
இலங்கை மருத்துவ சம்மேளனத்தின் 2011 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் மொழிமூல மருத்துவக் கட்டுரைக்கான விருதை தினக்குரல் ஊடகவியலாளர் எம்.எச்.எப். ஹுஸ்னா ஜெம்சித் பெற்றுள்ளார்.
இலங்கை மருத்துவ சம்மேளனத்தின் வருடாந்த மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறும் போது இவருக்கான விருது வழங்கப்படவுள்ளது...
காலி ஜிந்தோட்டை ஷாஹிரா தேசிய பாடசாலை மற்றும் கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியும் பாத்திமா முஸ்லிம் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத் தலைவியுமான ஹுஸ்னா ஜெம்சித், கொழும்பு 12 மீரானியா வீதியைச் சேர்ந்த இஸ்கானியா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி எம்.இஸட்.எம்.ஹுசைன் ஜெனீகா தம்பதியினரின் மகளுமாவார்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் சிறந்த ஊடகவியலாளர்களுக்காக வருடம் தோறும் வழங்கிவரும் விருதுகளில் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக அபிவிருத்தி செய்தியாளருக்கான சுப்பிரமணியம் செட்டியார் விருதை இவர் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2 கருத்துரைகள் :
வாழ்த்துக்கள்....
ما شاء الله الف مبروك للاخت الكريمة القريبة العهد بالزواج مع الاخ جمشيد النظيمي
Post a Comment