animated gif how to

இலங்கையிலிருந்து ஹஜ் சென்ற இருவர் மக்காவில் விபத்தில் வபாத்தாகினர்

October 15, 2011 |

October 14, 2011.... AL-IHZAN Local News

இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற ஹாஜிகள் இருவர் புதன்கிழமை (12.10.2011) மாலை மக்கா ஜித்தாவில் ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் வபாத்தாகினர் 


கடந்த எட்டாம் திகதி இலங்கையிலிருந்து எப்.எண்ட். எப். ஹஜ் குழுவில் சென்ற மடிகே கலகெதரயைச் சேர்ந்த அப்துல் வாஹித் ஜவாத் (51) அப்துல் ஹலீம் ஷம்ஷுன் நிஸா (42) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் மக்கா சென்றிருந்த வேளை இவர்கள் இருவரும் மற்றும் கண்டிப் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் இருவரும் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த சிலருமாக ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி ஜித்தா சென்றுள்ளனர்...


இதன்போதே இவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதன்போது ஜவாத் என்பவர் ஸ்தலத்திலேயே வபாத்தானதுடன் இதனைக் கண்ணுற்ற பக்கத்தில் சென்ற இவரது மனைவி ஷம்ஷுன் நிஸா அதிர்ச்சியில் வபாத்தாகியுள்ளார். இவர்களுடன் சென்ற இவர்களது உறவினர்கள் இருவரும் சிறு காயங்களுக்குள்ளாகினர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!