October 19, 2011.... AL-IHZAN Local News
-ஹஜ்ஜுல் அக்பர்-
கருப்பு ஒக்டோபர் மாதமான இந்த மாதத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றபட்டார்கள். முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த இத்தகைய அவலங்கள் ஒரு போதும் எவருக்கும் நிகழக்கூடாது. இந்த கருப்பு ஒக்டோபர் தொடர்பாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தெரிவித்த கருத்துக்கள் சுருக்கமாக இங்கு தரப்படுகின்றது.
தமிழ் , கிறிஸ்தவ சமூகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றிடம் இவை காணப்படுகின்றது. தமிழ் சமூகம் அதை இனப்பிரச்சினையின் பின்னர் உருவாக்கி கொண்டுள்ளது. கிறிஸ்தவ சமூகம் உலகின் கைத்தொழில் புரட்சிக்கு பின்னரான காலத்திலிருந்து தமது ஆதிக்கத்தை உலகில் நிலைநிறுத்த அப்படியான சர்வதேச வலையமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் பிரதேசவாதங்களும், தேசியவாதங்களும் தான் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது. இஸ்லாமிய உம்மத் என்றவகையில் முஸ்லிம் சமூகத்தை ஒழுங்குபடுத்த ஒன்றுபடுத்த செயல்பாடுகளும் நடைபெறவில்லை...
கருப்பு ஒக்டோபர் தொடர்பாக வினவியபோது, இலங்கையில் மிகவும் அப்பாவி சமூகமான எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்காத முஸ்லிம் சமூகத்தின் மீது இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் , முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றார்கள். முஸ்லிம் சமூகம் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைத்ததாக வரலாறு இல்லை. அசாதாரண நிலைகளில் சிலர் அநீதி இழைத்திருக்கலாம், சில கலவரங்களின் போது அவ்வாறு நடத்திருக்கலாம். ஆனால் முஸ்லிம் சமூகம் திட்டமிட்டு எந்த சமூகத்திற்கும் சமூகமாக இணைந்து அநீதி இழைக்கவில்லை. அப்படியான நிராயுதபாணி முஸ்லிம் சமூகத்தின் மீதுதான் இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
அன்று முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் அரசாங்கம் அந்த விடயத்தில் மௌனம் சாதித்தது என்று கூறலாம். ஒரு நிரபராதியான சமூகம் ஒரு போராட்ட குழுவால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது. அதை வெற்றியாக அவர்கள் கொண்டாடினார்கள். அதை பார்த்துகொண்டிருந்த அரசாங்கம் அதை தமக்கு சார்பாக, எதிரியை பலவீனப்படுத்த ஒரு துரும்பாக பாவித்து ,முஸ்லிம்களுக்கு பிரத்தியோகமாக எதுவும் செய்யப்படவில்லை.
வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் எந்தளவு தூரம் வரலாற்றில் உள்வாங்கப்பட்டுள்ளது என்று கருதுகிறீர்கள், ஓரளவுக்கு ஆவணப்டுத்தப்பட்டுள்ளது என்று சொல்லமுடியும். ஆனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் சக்திகள் மீது தாக்கம் செலுத்தும் அளவுக்கு உள்வாங்கப்படவில்லை.
கருப்பு ஜூலை சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. ஆனால் கருப்பு ஒக்டோபர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவையான அளவு உள்வாங்கப்படவிலை இது தொடர்பாக கேட்டபோது, தலைமைத்துவம் இல்லாமல் எவரும் அதை இலகுவாக உள்வாங்கிக் கொள்ளமாட்டார்கள். முஸ்லிம் சமூகத்திடம் அதற்கான ஆற்றல் இல்லை. முஸ்லிம்களிடம் தலைமைத்துவம் இல்லை , முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தக்கூடிய பொருத்தமான தலைமைத்துவத்தை முஸ்லிம் சமூகத்தால் பெறமுடியவில்லை. தமிழ் சமூகத்தில் நடக்கும் சிறிய , பெரிய பிரச்சினைகள் சர்வதேச கவனத்தை பெறுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் சர்வதேச கவனத்தை பெறுவதில்லை இதற்கு தலைமைத்துவம் இன்மை ஒரு பிரதான காரணம். இரண்டாவது காரணம் முஸ்லிம் சமூகத்திடம் ஒழுங்கமைப்பு இன்மை. மூன்றாவது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சர்வதேச வலையமைப்பு இன்மை.
மற்ற தமிழ் , கிறிஸ்தவ சமூகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றிடம் இவை காணப்படுகின்றது. தமிழ் சமூகம் அதை இனப்பிரச்சினையின் பின்னர் உருவாக்கி கொண்டுள்ளது. கிறிஸ்தவ சமூகம் உலகின் கைத்தொழில் புரட்சிக்கு பின்னரான காலத்திலிருந்து தமது ஆதிக்கத்தை உலகில் நிலைநிறுத்த அப்படியான சர்வதேச வலையமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்தில் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் பிரதேசவாதங்களும், தேசிய வாதங்களும் தான் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது. இஸ்லாமிய உம்மத் என்றவகையில் முஸ்லிம் சமூகத்தை ஒழுங்குபடுத்த ஒன்றுபடுத்த செயல்பாடுகளும் நடைபெறவில்லை.
நான் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினையை மட்டும் கூறவில்லை சர்வதேச ரீதியாக பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் பிரச்சினைகளும் ஊடங்களில் ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆப்கானிஸ்தான் பிரச்சினையை பயங்கரவாத்திற்கு எதிராக அமெரிக்கா யுத்தம் செய்வதாகவே ஊடகங்கள் சத்தம்போட்டு கொண்டிருகின்றது. இவைகள் முஸ்லிம் சமூகத்தின் பலவீனத்தை காட்டுகின்றது, முஸ்லிம் சமூகத்தின் கையாலாகாத தன்மையின் விளைவுகள்தான் இவை. மற்ற சமூகங்கள் எமது பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை என்பதால் அவை சாதாரண பிரச்சினைகள் என்பதல்ல.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினை பதிவுகளை பெற்றிருந்தாலும் அவை சரியான தாகத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு நாட்டில் , ஒரு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு நிகழும் அவலங்களை அந்த பிரதேசத்துடன் மட்டும் வைத்து பார்க்கமுடியாதுள்ளது. இன்று கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அது அவ்வாறு பார்க்கப்படுவதில்லை. கிழக்கு தீமோர் பிரச்சினை ஓர் சர்வதேச பிரச்சினையாகத்தான் பேசப்படுகின்றது. ஆனால் ஆப்கானிஸ்தான் பிரச்சினை அப்படிப் பேசப்படவில்லை அது பயங்கரவாத பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது. இவை இரண்டுக்குமுள்ள வித்தியாசத்திக்கான காரணம் அவர்களுக்கு சர்வதேச தலைமைத்துவம் இருக்கிறது வல்லரசு என்ற அதிகாரம் இருக்கின்றது தீர்மானம் மேற்கொள்ளும் சக்தி இருக்கிறது. அவர்கள் நினைத்தால் உண்மையை பொய்யாக்க முடியும் பொய்யை உண்மையாக்க முடியும்.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் அது ஒரு நாட்டுடன் தொடர்பான அல்லது பிரதேசத்துடன் தொடர்பானதாக இருக்கலாம், ஆனால் அவைகளை ஒரு சிறிய எல்லைக்குள் வைத்து மட்டும் பார்க்க முடியாது. இலங்கையில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை விடுதலை புலிகள் வெளியேற்றியது ”மிகவும் பயங்கரமான ஒரு பகல்கொள்ளை” – இலங்கை – வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்காது. ஆனால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினை அந்த பிரதேசத்துதன் மட்டுப்படுத்தி நான் பார்கவில்லை. முஸ்லிம் சமூகத்தின் பலவீனம் காரணமாக இந்த பிரச்சினை அப்படியே மண்ணுக்குள் புதைக்கப்படும் பிரச்சினையாக உள்ளது.
-இஸ்லாமிய சாம்ராஜியத்தில்- அப்பாசிய கலிபாக்களின் ஒருவரான முஹ்தசிம் இவர் மிக பலவீனமாக கிலாபத் காலப்பிரிவில் ஒரு கலிபாவாக இருந்தபோதும் அம்மூரியா என்ற பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு அநியாயம் இழைக்கப்பட்ட நேரம் அந்த பெண் கலிபாவே என்னை காப்பற்றுங்கள் என்று உதவி கோரியபோது அந்த செய்தி அவருக்கு எட்டுகிறது. அவர் படையை திரட்டிக்கொண்டு சென்று அந்த பிரதேசத்தை கைப்பற்றி அந்த பெண்ணையும் மீட்டு அந்த பெண்ணுக்கு அநியாயம் இழைத்தவர்களை அவள் முன் நிறுத்தி அந்த பெண்ணிடம் இவர்களுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டுமென்று சொல் என்று கேட்ட வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் சமூகத்தின் எந்த பிரச்சினையும் அது முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாட்டிலுள்ள ஒரு பிரச்சினையாக இருக்கலாம் அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டிலுள்ள ஒரு பிரச்சினையாக இருக்கலாம் அதை எங்குபோய் முறையிடுவது ? – என்ற பிரச்சினை இருக்கின்றது -.
இன்று முஸ்லிம்களுக்கு சர்வதேச தலைமைத்துவம் இல்லை. பல முஸ்லிம் நாடுகள் இருக்கின்றது இவற்றை பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு எதிராக பெரிய வேலைத்திட்டம் ஒன்றை செய்யமுடியும் ஆனால் அந்த நிலையில் முஸ்லிம் உம்மத்தோ , முஸ்லிம் நாடுகளோ இல்லை இது அல்லாஹ்வின் தூதர் கூறிய செய்தியைத்தான் நினைவுபடுத்துகின்றது. ஒரு காலம் வரும் அப்போது பசித்த பிராணி தமது உணவு தட்டை நோக்கி பாய்ந்து வருவது போன்று அடுத்த சமூகங்கள் உங்களின் மீது பாயும் என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். இதன்போது தோழர்கள் நாம் அப்போது எண்ணிக்கையில் குறைவாக இருப்போமா ? என்று வினவினார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் இல்லை ஆனால் நீங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நுரை மாதிரி இருப்பீர்கள் என்று கூறினார்கள்.
இந்த பிரச்சினைகள் இதைத்தான் நினைவு படுத்துகிறது எனவே வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அணியாயங்களாக இருக்கலாம் ஆப்கானித்தான் போன்ற நாடுகளில் நடக்கும் அணியாயங்களாக இருக்கலாம் முஸ்லிம்கள் தமது இலச்சியத்தை நோக்கி திரும்பவேண்டும், உலகில் தமது கடமைகளை, பொறுப்புகளை உணரவேண்டும் அதன் பால் ஒழுங்கமைக்கப் படவேண்டும் என்பதைத்தான் அவை வெளிப்படுத்துகின்றது என்பதுதான் எனது செய்தி.
இன்று உலகம் ஒரு பூகோள கிராமகாம மாறியுள்ளது நடக்கும் சம்பவங்களை ஒரு கிராமத்துக்குள் ஒரு நாட்டின் எல்லைக்குள் வைத்து பார்கின்ற நிலை இல்லை, அப்படி எனக்கு பார்க்க முடியாது உலகில் என்ன நடந்தாலும் அதன் ஆரம்பம் அல்லது அதை இயக்கும் சக்தி உலகில் எங்காவது ஒரு இடத்தில் இருக்கின்றது அப்படியான ஒரு உலக ஒழுங்கில்தான் உலகம் இயங்குகின்றது அதன் காரணமாகத்தான் இவைகள நடக்கின்றது.
நன்றி:
யாழ் முஸ்லிம் வலைத்தளம்

0 கருத்துரைகள் :
Post a Comment