animated gif how to

"உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை!

October 19, 2011 |

October 19, 2011.... AL-IHZAN World News
பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பிராந்தியம் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், பாகிஸ்தானில்  உள்ளே நுழையுமுன் ஒன்றுக்குப் பத்துமுறை யோசித்துக்கொள்ளுங்கள்" என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஷ்ஃபாக்  ஃபர்வேஸ் கயானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
"ஆஃப்கானிலிருந்து வடக்கு வஜீரிஸ்தானில்   நுழையும் முன் ஒன்றுக்குப் பத்தாக யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பாகிஸ்தான் அணு ஆயுதம் கொண்டுள்ள நாடு. அது ஒன்றும் ஆஃப்கனோ, இராக்கோ அல்ல" என்றார் கயானி. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கமிட்டி முன்பாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  கடந்த மே மாதம் பாகிஸ்தான் நகரமான அபோடாபாதில் நுழைந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் அங்கு வசித்து வந்த ஒசாமா பின் லேடனை கொன்றனர். அது முதலே அமெரிக்காவுக்கு எதிர்ப்பான இராணுவக் குரல்கள், குறிப்பாக தலைமை தளபதியின் அமெரிக்க  எதிர்ப்புக் குரல்கள் பாகிஸ்தானில் கேட்கின்றன...
ஆப்கனில், அமெரிக்கத் தரப்புக்குச் சேதம் ஏற்படுத்தும் 'ஹக்கானி தீவிரவாத குழுவினருக்கு வடக்கு வஜீரிஸ்தானே மையமாகத் திகழ்கிறது என்பதும், அக்குழுவினருக்குப் பாகிஸ்தான் இராணுவமே உதவி புரிந்து வருகிறது என்பதும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு.  இதனை முன்னிட்டு, வடக்கு வஜீரிஸ்தானில்  அமெரிக்க  இராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட நிலையில், கயானியின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
"ஆப்கன் பிரச்சினையை பாகிஸ்தானின் பங்களிப்பு இல்லாமல் தீர்க்க முடியாது" என்ற  ஜெனரல் கயானி, "வஜீரிஸ்தான் தீவிரவாதக் குழுக்கள் மீது தேவைப்பட்டால் நாங்களே நடவடிக்கை எடுப்போம்" என்றார்.  அமெரிக்கத் துருப்புகள் வஜீரிஸ்தானில் நுழையும் பட்சத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கை எப்படி அமையும் என்பது குறித்து கயானி ஏதும் கூறவில்லை.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!